ராகு-கேது பெயர்ச்சி... தீபாவளி முதல் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக வாழ்க்கை!

ராகு கேது பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில், ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் அல்லது பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2023, 10:00 AM IST
ராகு-கேது பெயர்ச்சி... தீபாவளி முதல் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக வாழ்க்கை! title=

ஜோதிடத்தில், சனி ஒரு கர்ம பலன்களை கொடுக்கும் கிரகமாக கருதப்படுகிறது, அதே நேரத்தில் ராகு மற்றும் கேது பாவ கிரகங்களாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் எப்பொழுதும் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகின்றன. ஜாதகத்தில் ராகு கேது நிலை அசுபமாக இருந்தால், அந்த நபர் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். ஒன்றரை வருடத்தில் ராசியை மாற்றும் நிழல் கிரகங்கள் என அழைப்படும் ராகு-கேது, 2023ல்  பெயர்ச்சி ஆகின்றன.

ராகு மற்றும் கேது கிரகங்கள் எப்போதும் வக்ர நிலையில் நகர்கின்றன, அதே போல் ஒன்றரை வருடங்களில் ராசியை மாற்றும். அசுபமான ராகு-கேது பல தொல்லைகளை கொடுப்பதால் ராகு-கேது கொடூர கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதனால்தான் ஜோதிடத்தில் ராகு-கேது பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இருவரும் ஒரே நாளில் ராசி மாறுகிறார்கள். 2023-ம் ஆண்டு ராகு-கேதுவின் நிலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடம் அக்டோபர் 30, 2023ல் ராகு-கேது பெயர்ச்சியாகப் போகிறது. தற்போது ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் அமர்ந்துள்ளனர். அக்டோபர் 30, 2023 அன்று மதியம் 01.33 மணிக்கு ராகு மேஷ ராசியிலிருந்து விலகி மீன ராசியில் நுழைகிறார். அதே நேரத்தில் கேது துலாம் ராசியை விட்டு கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். இது குறிப்பிட்ட 2 ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது.

ராகு கேதுவின் ராசி மாற்றம் விதியை மாற்றும்

ராகு-கேதுவின் ராசி மாற்றம் 2 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். இவர்களுக்கு இந்த கிரகங்களின் அசுப பலன்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இவர்களின் தலைவிதி மாறும் என்றே கூறலாம். இந்த 2 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் சஞ்சாரம் மிகவும் சுப பலன்களைத் தரப்போகிறது. இவர்கள் ராகு-கேதுவின் அசுப பலன்களில் இருந்து விடுபடுவார்கள். ராகு-கேதுவின் பாதகமான நிழல் அவர்களிடமிருந்து நீங்கும், அதன் காரணமாக அவர்களின் முயற்சிகள் பலன் அளிக்கத் தொடங்கும். பொருளாதார நிலையில் வலுவான முன்னேற்றம் ஏற்படும். வருமான அதிகரிப்பு உங்கள் நிதி பிரச்சனைகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும். தொழிலில் ஏற்றம் உண்டாகும். விரும்பிய பதவியும் பணமும் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும். உடல் பிரச்சனைகள் தீரும். திருமணம் ஆகாதவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்

சிம்மம்: ராகு-கேதுவின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவர்கள் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பதற்றம், ஏற்ற தாழ்வுகள் அதிலிருந்து விடுபடுவார்கள். தடைப்பட்ட பணத்தை திருப்ப பெறுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். இந்த நேரம் பழைய இழப்புகளை ஈடு செய்யும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்ந்த பதவியைப் பெறலாம். வியாபாரத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை முடிப்பது சாதகமாக இருக்கும். வெளிநாட்டு பயணம் செல்லலாம். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் இனி மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

Trending News