செம்டம்பர் மாதத்தில் சீரும் சிறப்புமாக வாழப் போகும் ‘சில’ ராசிகள்!

செப்டம்பரில் 4 கிரகங்களின் மாற்றம் நடக்க உள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே குரு மேஷ ராசியில் தனது போக்கை மாற்றிக்கொண்டு வக்ர நிலைக்கு மாறுகிறது. குரு தவிர, புதன் மற்றும் சுக்கிரனின் இயக்கங்களும் செப்டம்பர் மாதத்தில் மாறுகின்றன. இந்த மாதத்தில் சூரிய பகவான் மட்டுமே ராசியை மாற்றப் போகிறார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 24, 2023, 10:52 PM IST
  • வெற்றியை அடைய, நலம் விரும்பிகளின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும்.
  • தடைபட்ட சில வேலைகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
  • குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
செம்டம்பர் மாதத்தில் சீரும் சிறப்புமாக வாழப் போகும் ‘சில’ ராசிகள்! title=

செப்டம்பர் மாத ராசிபலன் 2023: செப்டம்பரில் 4 கிரகங்களின் மாற்றம் நடக்க உள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே குரு மேஷ ராசியில் தனது போக்கை மாற்றிக்கொண்டு வக்ர நிலைக்கு மாறுகிறது. குரு தவிர, புதன் மற்றும் சுக்கிரனின் இயக்கங்களும் செப்டம்பர் மாதத்தில் மாறுகின்றன. இந்த மாதத்தில் சூரிய பகவான் மட்டுமே ராசியை மாற்றப் போகிறார். அப்படிப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதத்தில் மேஷம், சிம்மம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு கிரகப் பெயர்ச்சி பலன் கிடைக்கும். செப்டம்பரில் கிரகங்களின் நிலை மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

செப்டம்பரில் கிரக மாற்றம், தேதி 

செப்டம்பர் மாதத்தில் கிரகங்கள் எப்போது, ​​எப்படி மாறும்; செப்டம்பரில் கிரகப் பெயர்ச்சியின் நிலையைப் பார்ப்போம்.

செப்டம்பர் 4, 2023 அன்று, சுக்கிரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார்.
செப்டம்பர் 4, 2023 அன்று, குரு மேஷத்தில் வக்ர நிலையை அடைகிறார்.
செப்டம்பர் 16, 2023 அன்று புதன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார்.
செப்டம்பர் 17, 2023 அன்று சூரியன் கன்னி ராசியில் மாறுகிறார்.
செப்டம்பர் 24, 2023 அன்று செவ்வாய் கன்னி ராசியில் ஆஸ்தமனம் ஆகிறார்.

மேஷத்தில் செப்டம்பர் கிரக மாற்றத்தின் பலன்கள்

செப்டம்பர் மாதத்தில் ஏற்படப்போகும் கிரக மாற்றங்களுக்கு மத்தியில் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம் குரு ராகுவின் ஸ்தானத்தாலும் செவ்வாயின் அம்சத்தாலும் இவர்கள் மரியாதை பெறுவார்கள். மேலும் உங்களின் புகழ் உயரும். இத்துடன் உங்கள் காதல் வாழ்க்கையும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் உற்சாகமும் ஒத்துழைப்பும் இருக்கும். யாருடனும் தகராறில் ஈடுபட்டு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இது தான் உங்களுக்கான அறிவுரை. இல்லையெனில், நீங்கள் இழப்பை சந்திக்கலாம்.

ரிஷபத்திற்கான செப்டம்பர் கிரக மாற்றத்தின் பலன்கள்

செப்டம்பர் மாதத்தில் ஏற்படப்போகும் கிரக மாற்றங்களின் பலன்களால் ரிஷபம் ராசிக்காரர்களின் நிலையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வீடு மற்றும் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது மாற ஆரம்பிக்கும். இதனுடன், பொருளாதார விஷயங்களிலும் இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் பணத்தைப் பெற பல வழிகள் செய்யப்படும்.

மேலும் படிக்க | நேருக்கு நேர் வரும் சூரியன் சனி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், வெற்றிகள் குவியும் 

சிம்ம ராசிக்கான செப்டம்பர் கிரக மாற்றத்தின் பலன்கள்

செப்டம்பரில் நிகழப்போகும் கிரகமாற்றத்திற்கு மத்தியில், சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் பலனளிக்கப் போகிறது. இந்த நேரத்தில் உங்கள் தடைபட்ட வேலைகளில் முன்னேற்றம் இருக்கும். இருப்பினும், உங்கள் வருமான ஆதாரங்கள் குறைவாக இருக்கும், ஆனால் இன்னும் உங்கள் நிதி நிலை பாதிக்கப்படாது. இந்த மாதம் பல பயணங்களை மேற்கொள்ளலாம்.

துலாம் ராசிக்கான செப்டம்பர் கிரக மாற்றத்தின் பலன்கள்

செப்டம்பரில் ஏற்படும் கிரக மாற்றங்களுக்கு மத்தியில் துலாம் ராசிக்காரர்களுக்கு வெற்றி கிட்டும். ஆனால், அதற்காக நீங்கள் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனுடன், நீங்கள் கொஞ்சம் பொறுமையுடன் வேலை செய்ய வேண்டும். வெற்றியை அடைய, நலம் விரும்பிகளின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும். உங்கள் நிதி நிலைமை இந்த மாதம் மிகவும் நன்றாக இருக்கும் என்றாலும், குறிப்பாக பரிவர்த்தனைகளைச் செய்யும்போது கவனமாக இருங்கள்.

விருச்சிக ராசிக்கான செப்டம்பர் கிரக மாற்றத்தின் பலன்கள் 

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் வேலையில் பிஸியாக இருப்பார்கள். பணியிடத்தில் பணிச்சுமை தொடரும். ஆனால், உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். இது மட்டுமின்றி, தடைபட்ட சில வேலைகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக நீங்கள் நிறைய செலவிடலாம். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | திடீர் பண வரவு: சனி பகவானின் அருளால் இந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும், தலைவிதி மாறும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News