சூரிய கிரகணம் அன்று உருவாகும் யோகங்கள்... கடின உழைப்பின் முழு பலனையும் பெறும் 5 ராசிகள்

Surya Grahan 2023: சூரிய கிரகண நாளில் பல்வேறு சுப யோகங்கள் உருவாகும். இது சில ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும்.  சூரிய கிரகணத்தன்று உருவாகும் சுப யோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 14, 2023, 03:06 PM IST
  • தொழிலில் பெரிய முன்னேற்றம் அடையலாம்.
  • கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள்.
  • நேர்மறை ஆற்றல் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
சூரிய கிரகணம் அன்று உருவாகும் யோகங்கள்... கடின உழைப்பின் முழு பலனையும் பெறும் 5 ராசிகள் title=

Surya Grahan 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஏப். 20 அன்று நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் மேஷ ராசியில் காணப்படுகிறது. ஏனெனில், சூரிய கிரகணத்திற்கு முன், இன்று (ஏப். 14) சூரியன் மேஷ ராசியில் பெயர்ச்சியாகியுள்ளார். அதே நேரத்தில் சூரிய கிரகண நாளில் சர்வார்த்த சித்தி யோகம், புதாதித்ய யோகம், ஹன்ஸ் யோகம் உள்ளிட்ட பல சுப யோகங்களும் உருவாகும். இந்த சுப யோகங்கள் அமைவது சூரிய கிரகணத்தின் அசுப பலனை நீக்கும். மறுபுறம், இது சில ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். சூரிய கிரகணத்தன்று உருவாகும் சுப யோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும் என்பதை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | சூரிய மகாதசை என்றால் என்ன? யாருக்கெல்லாம் இந்த யோகம் கிடைக்கும்? புத்தாண்டு பலன்கள் 2023

சூரிய கிரகணத்தின் விளைவு

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் அனுகூலமாக இருக்கும். இந்த நபர்கள் பணியிடத்தில் பாராட்டப்படுவார்கள். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மரியாதை, பதவி உயரும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். உங்கள் தடைபட்ட திட்டங்கள் மீண்டும் தொடங்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகண நாளில் உருவாகும் சுப யோகம் நல்ல பலன்களைத் தரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் அடையலாம். பதவி உயர்வு, பணி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பணமும் நன்மை தரும். உங்கள் ஆளுமையின் செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கும் சூரிய கிரகணம் பலன்களைத் தரும். இவர்களின் காதல் வாழ்க்கையில் நிறைய காதல் இருக்கும். உறவில் காதல் அதிகரிக்கும். வியாபாரம் பெருகும். வருமானம் அதிகரிக்கும். நிலம், வாகனம் வாங்கலாம். ஆன்மீக பணிகளில் மனம் ஈடுபடும். நேர்மறை ஆற்றல் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகளை சூரிய கிரகணம் ஏற்படுத்துகிறது. உங்கள் உரிமைகள் அதிகரிக்கும். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். நிதி ஆதாயம் இருக்கும், இது உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் அனுகூலமான பலன்களைத் தரும். நீங்கள் பயணம் செல்லலாம். உடல் பிரச்சனைகள் நீங்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | ஆண்டின் மிகப்பெரிய ராசி மாற்றம், ஏப்ரல் 22ம் தேதி இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News