நம்மில் பலர் திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் கண்டிப்பாக வரும் என்ற வாக்கியத்தை அடிக்கடி கேட்டிருப்போம். இதைக் கேட்டு திருப்பதிக்கு செல்பவர்களும் உண்மையிலேயே தங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது உண்மைதானா? இங்கு தெரிந்து கொள்வோம்.
சென்னையில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆந்திராவைச் சேர்ந்த நகரம்தான் திருப்பதி. இந்தியாவில் உள்ள புண்ணிய ஸ்தலங்களில் முக்கிய இடம் பெற்ற. இதை திருமலை எனவும் திருப்பதி தேவஸ்தானம் எனவும் பலர் குறிப்பிடுகின்றனர். சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்ல விரும்புவோர் பெரும்பாலும் ரயிலில் செல்கின்றனர். சிலர் பேருந்து மற்றும் விமான போக்குவரத்து மூலமாகவும் சொல்கின்றனர். ஒரு நாளைக்கு பல ஆயிரம் பக்த கோடிகள் வந்து செல்லும் இந்த இடத்தில் பல்வேறு கோயில்கள் அமைந்துள்ளன.
திருப்பதியில் வந்து சுவாமி தரிசனம் செய்ய உலகின் பல மூளைகளில் இருந்து பல கோடி பேர் வருவதுண்டு. திருப்பதி ஏழுமலையான் இந்தியாவின் பணக்கார கடவுள்களில் ஒருவராக வாக்கப்படுகிறார். கோயில் உள்ள மூலவருக்கு தினம் தோறும் 120 வகையான ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த ஊரில் பக்தர்களுக்காக தங்கும் இடங்கள், அன்னதான கூடங்கள் என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்தக் கோவில் இருக்கும் ஒவ்வொரு தூணுக்கும் பல கதைகளும் சிறப்புகளும் உள்ளன.
திருப்பதிக்கு செல்வதால் நிகழும் மாற்றங்கள்!
வழக்கமாக திருப்பதிக்கு பலரும் அவரவர் குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஒரு சிலர் மொட்டை அடித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவர். ஒரு சிலர் தாங்கள் வேண்டியது நிறைவேறினால் கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதி வரை மலையேறி சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பர்.
மேலும் படிக்க | அமாவாசை அன்று இரவில் இந்த பரிகாரங்களை செய்யுங்கள்! தோஷம் நீங்கும்!
மனக்குழப்பத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்கள், தங்களது பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் தவிப்பவர்கள், நிதி பிரச்சனையில் இருந்து மீள முடியாதவர்கள் என பல்வேறு சிக்கல்கள் சிக்கித் தவிப்பவர்கள் பதிக்கு சென்று வரலாம். இதனால் அவர்களின் மனதிலும், வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்கள் உண்டாகும். ஒரு சிலர் நல்ல காரியங்களை தொடங்குவதற்கு முன்னர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இதற்கு காரணம், புதிதாக தொடங்கும் அந்த செயலில் ஏழுமலையான் துணை நிற்க வேண்டும் என்பதால் தான்.
திருப்பதிக்கு சென்று விட்டு திரும்பவோர் பலருக்கு வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இது பெரும்பாலான பக்தர்களுக்கு பொருந்தி போவதால், திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற கூற்று உண்மையாக இருக்கும் என கூறப்படுகிறது.
இரவு தங்க வேண்டும்..
திருப்பதிக்கு செல்பவர்கள் இரவு தங்கி விட்டு வந்தால் அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை எதிர் கொள்வர் என நம்பப்படுகிறது. அதனால் இனி திருப்பதிக்கு செல்கையில், இரவு தங்கிவிட்டு வருவது நல்லது.
மேலும் படிக்க | உச்சம் செல்லும் குரு.. இந்த ராசிகளுக்கு 2024 ஆம் ஆண்டு பொற்காலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ