நாகத்தின் தலை பகுதியாக ராகுவும், வால்பகுதியாக கேதுவும் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதைப் போல, முன் வினைகளின் வழியே உண்டாகும் ஆசைகளின் தொடர்ச்சியை அனுபவிப்பதற்கான ஆசையையும், அதை அடைவதற்கான ஆற்றலையும் கொடுப்பவர் ராகு கிரகம் ஆகும். அதனால் தான், மூளை, சிந்திக்கும் திறன் இருக்கும் தலைப்பகுதி ராகு தேவருக்கு உள்ளதாக ஐதீகம்.
விருப்பத்தினை கொடுக்கும் புத்திக்கும், செயலை செய்யும் உடலுக்கும் இடையிலான வேறுபாடு தான் உடலும் தலையும் மாறுபட்டிருக்கும் அமைப்பு. நாகத்தின் உடலை பெற்றுள்ள கேது, நிதர்சனமான உலகில் வாழும் கிரகம் ஆகும், எது சாத்தியம் எது அசாத்தியம் என்பதை உணர்த்தும் தன்மையைக் கொண்டவர் கேது.
மனதில் தோன்றும் செயல்களை செய்யத் தேவையான ஆற்றல் மற்றும் அதற்குத் தேவையான அறிந்து கொள்ளும் இயல்பு, தெளிவு கொண்ட அறிவு இவை இரண்டையும் இணைக்கும் தன்மையை கேது பகவான் தருவதால் தான் அவரை ஞானகாரகன் என்று சொல்லுகின்றோம்
நிதர்சனத்திற்கும் ஆசைக்கும் இடையிலான சிந்தனைகளைக் கொடுத்து அதன் மூலம் தோல்வி குறித்த அச்சம், தயக்கம் தடுமாற்றம்.. கொடுப்பார் கேது. ஒரு முறை புரிந்து தெளிந்தபிறகு, மீண்டும் நப்பாசையைக் கொடுத்து வாழ்க்கையை அனுபவிக்க ராகு கிரகம் தூண்டும்.
அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்ற முழுமைத்தன்மையை நோக்கி செலுத்தும் கேது, பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வைப்பார். இப்படி ஆசையை கொடுத்தும் கெடுத்தும் ஒரே விஷயத்தை முன்னோக்கியும் பின்னோக்கியும் இழுக்கும் இரட்டை கிரகங்களான ராகு கேதுவினால் ஏற்படும் போராட்டத்தையும், தோஷங்களையும் தவிர்க்க நாகசதுர்த்தி நாளன்று விரதம் இருப்பார்கள். இதனைத் தவிர, வேறு பரிகாரங்களையும் தெரிந்துக் கொள்வோம்.
ராகு மற்றும் கேது பரிகாரங்கள்
சிவ வழிபாடு நவகிரகங்களின் எந்தவொரு தோஷத்தையும் போக்கும் வழி என்பது பொதுவான பரிகாரம் ஆகும். சிவ வழிபாட்டைத் தவிர, பார்வதியின் வடிவங்களான அம்மன், துர்க்கை என பெண் தெய்வங்களுக்கும், சரபேஸ்வரருக்கும் ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
அதேபோல, வாயுதலமான காளஹஸ்தி சென்று அன்று ராகுவை வழிபட்டால் ராகுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். ராகு-கேது தோஷங்களை குறைக்கும் நல்ல பரிகாரம் இது. அதேபோல, ராமேஸ்வரம் சென்று அங்குள்ள 12 தீர்த்தங்களிலும், கடலிலும் நீராடி ராமேஸ்வர ஈஸ்வரனை தரிசனம் செய்து வந்தால் ராகு கேது தோஷங்கள் நிவர்த்தியாகும்.
கேது தோஷ பரிகாரம்
நாக வழிபாடு, சிவ வழிபாடு தவிர, சித்திரகுப்தன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வந்தால் கேது தோஷம் விலகும். விநாயகரை புதன் கிழமையில் வழிபட்டுவந்தால் கேது பகவானின் அருளாசி கிடைக்கும். கேதுவுக்கு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து,கேது காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், கேது தோஷங்கள் விலகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ