துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை; தங்கம் வென்றார் அபூர்வி சண்டேலா!

புதுடெல்லியில் நடைப்பெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அபூர்வி சண்டேலா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Last Updated : Feb 23, 2019, 03:32 PM IST
துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை; தங்கம் வென்றார் அபூர்வி சண்டேலா! title=

புதுடெல்லியில் நடைப்பெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அபூர்வி சண்டேலா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ISSF உலக கோப்பை 2019 தொடர் புதுடெல்லியில், கடந்த வியாழன் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் மகளிர் 10m பிரிவில் இந்தியாவின் சண்டேலா தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 252.9 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்த அபூர்வி, உலக கோப்பை துப்பாக்கி சுடதல் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு முன்னதாக மகளிர் 10m பிரிவில் இந்தியாவின் அஞ்சலி பகாவத் தங்கம் வென்று முதல் இந்திய பெண் என்னும் பெருமையினை பெற்றார்.

இன்று தங்கம் வென்றுள்ள அபூர்விக்கு இது, உலக கோப்பை சாம்பியன் போட்டிகளில் கிடைக்கும் 3-வது பதக்கம் ஆகும். முன்னதாக கடந்த 2015-ஆம் ஆண்டு சாங்கவாங் உலக கோப்பை சாம்பியன்சிப் போட்டியில் வெண்கலம் வென்ற அபூர்வி, அதே ஆண்டு நடைப்பெற்ற ISSF உலக கோப்பை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.

முன்னதாக இறுதி போட்டிக்கு முன்னேறிய அபூர்வி நான்கு தகுதி சுற்றுகளை 629.3 புள்ளிகளுடன் வெற்றிகரமாக நிறைவு செய்தார். இவரை எதிர்த்து விளையாடிய சிங்கப்பூரின் ஹூ கியு உய் (629.5 புள்ளிகள்). சீனாவின் ஜுய் யிங்கிஜ்ஜி (630.8), ஜூவா ருபோ (634.0) புள்ளிகள் பெற்றனர். உலக சேம்பியன் போட்டிக்கு 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் இவர்களில் அபூர்வி முதல் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ள மற்ற வீரர்களான மௌட்கிள் மற்றும் இளவேனில் வாலரிவான் முறையே  628.0 மற்றும் 625.3 புள்ளிகளுடன் தகுதிச்சுற்றில் 12-வது மற்றும் 30-வது இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News