INDvsAUS: 3-வது t20; பெரும் ஆபத்தினை எதிர்நோக்கி இந்திய அணி!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைப்பெறுகிறது!

Last Updated : Nov 25, 2018, 12:02 PM IST
INDvsAUS: 3-வது t20; பெரும் ஆபத்தினை எதிர்நோக்கி இந்திய அணி! title=

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைப்பெறுகிறது!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தற்போதை நடைப்பெற்று வரும் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மழை குறிக்கிட்டதன் காரணமாக இந்திய அணியின் வெற்றி பறிக்கப்பட்டது. முதல் போட்டியல் ஆஸி., அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 

இந்நிலையில் இன்று இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் பிற்பகள் 1.20 மணியளவில் நடைப்பெறுகிறது. இப்போட்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டுமென இந்தியாவும், கோப்பையினை தட்டிச்செல்ல ஆஸிதிரேலியாவும் போராடவுள்ளது.

இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னாதக கணுக்கால் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் பில்லி ஸ்டான்லோக்-க்கு பதிலாக இன்றைய போட்டியில் நாதன் கௌட்லர் களமிறங்குகிறார். இவருடன் வேகப்பந்து வீச்சளார் மிட்செல் ஸ்டார்ச்-ம் களமிறங்குகிறார். இந்திய அணி தரப்பில் மாற்றம் ஏதும் இல்லை.

இன்றைய போட்டியில் இந்தியா தோல்வி அடையும் பட்சத்தில் தொடரை இழக்கும். கடந்த 2017-ஆம் ஆண்டு மேற்கிந்திய அணிக்கு எதிராக டி20 தொடரை இழந்துள்ள இந்தியா இதுவரை 9 தொடர்களில் வெற்றி (அ) சமன் செய்துள்ளது. இந்நிலையில் இன்றையே போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில் இந்த சாதனை எண்ணிக்கை இன்று முடிவடையும்.

Trending News