ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ராஜினாமா!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் டேவிட் சாகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்!

Updated: Feb 8, 2019, 11:50 AM IST
ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ராஜினாமா!
Image Credits: Twitter/@cricketcomau

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் டேவிட் சாகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த டேவிட் சாகர், இந்தியாவிற்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை அடுத்து தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த டேவிட் சாகர், தற்போது ஆஸ்திரேலியா அணி கண்ட தோல்வியால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். இதன் காரணமாக தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த தகவலை உறுதிப்படுத்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், டிராய் கூலே-ஐ பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. எதிர்வரும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாடும் ஆஸ்திரேலியா அணிக்கு டிராய் கூலே பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன் கூலே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

தற்போது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் சாகர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவும், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான விக்டோரியா அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.