இன்றைய போட்டி ஹைதராபாத் அணிக்கு முக்கியமானது; ஃப்ளே-ஆப் சுற்றுக்கு செல்லுமா?

அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பாக இருக்கும் இன்றைய போட்டி ஹைதராபாத் அணிக்கு முக்கியமானதாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 4, 2019, 04:27 PM IST
இன்றைய போட்டி ஹைதராபாத் அணிக்கு முக்கியமானது; ஃப்ளே-ஆப் சுற்றுக்கு செல்லுமா? title=

பெங்களூரு: IPL 2019 தொடரின் 54-வது லீக் ஆட்டம் இன்று பெங்களூரில் உள்ள எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் விராத் தலைமையிலான பெங்களூரு அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

புள்ளி பட்டியலில் 9 புள்ளியுடன் கடைசி இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. ஏற்கனவே அந்த அணி ஃப்ளா-ஆப் சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்துள்ளது. இதனால் அறுதல் வெற்றி பெற விளையாடக்கூடும். 

அதேவேளையில் ஹைதராபாத் அணிக்கு இந்த போட்டி முக்கியமானதாகும். புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணி உள்ளது. இரண்டு அணிக்கும் ஒரு போட்டி எஞ்சியுள்ளது. இரண்டு அணிகளில் எந்த அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறதோ? அந்த அணி ஃப்ளா-ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். 

எனவே இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அடுத்த சுற்றுக்கு செல்ல இந்த போட்டி ஒரு வாய்ப்பாக இருப்பதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே போட்டி கடுமையாக இருக்கும்.

Trending News