சிஎஸ்கே முன்னாள் வீரரை தட்டி தூக்கிய டெல்லி அணி!

ராஜஸ்தான், ஆர்சிபி அணிக்காக விளையாடிய வாட்சன் 2018-ம் ஆண்டு சிஎஸ்கேவில் இணைந்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2022, 08:02 PM IST
  • டெல்லி அணியில் துணை பயிற்சியாளராக நியமனம்
  • சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்
  • ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக உள்ளார்
சிஎஸ்கே முன்னாள் வீரரை தட்டி தூக்கிய டெல்லி அணி! title=

ஐபிஎல் திருவிழா இந்த மாதம் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் இணைந்துள்ளது. இந்த முறை ஐபிஎல் ஏலம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதோடு அணிகளுக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிஎஸ்கே அணியில் தல தோனி விளையாடுவதை பார்க்க பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் சின்ன தல என ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை யாரும் ஏலம் எடுக்காததால் அவர் ஐபிஎல்லில் இல்லை. ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல்லுக்காக காத்திருக்கும் நிலையில் டெல்லி அணி சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளனர்.

Shane Twitter Image

அதன்படி டெல்லி அணியின் துணை பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் முன்னாள் நட்சத்திய வீரரான இவர் கடந்த 2020-ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். அவரது ஆட்டத்தால் பலமுறை சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது. அதிரடி ஆட்டக்காரரான இவருக்கு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. 

மேலும் படிக்க | எம்எஸ் தோனி ஓய்வு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

ராஜஸ்தான், ஆர்சிபி அணிக்காக விளையாடிய வாட்சன் 2018-ம் ஆண்டு சிஎஸ்கேவில் இணைந்தார். தற்போது இவர் டெல்லி அணியில் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக இவர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க | Ind vs SL: குறும்புக்கார ரோஹித்! அம்பயரை டிஆர்எஸ் மூலம் கலாய்க்கும் வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News