ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பைனல் வரை முன்னேறிய தீபா கர்மாகர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
ரியோ நகரில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பிரிவு ஜிம்னாஸ்டிக்கில் பைனலுக்கு தகுதி பெற்ற தீபா கர்மாகர், 4-வது இடம் பிடித்தார். மேலும் ஜிம்னாஸ்டிக் பைனலுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையும் தீபா கர்மாகருக்கு கிடைத்தது. இந்நிலையில், அவரது பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், துப்பாக்கி சுடும் வீராங்கனை ஜித்து ராய் பெயரும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு தினத்தன்று ஜனாதிபதி இந்த வருதினை வழங்க உள்ளார். இந்த விருது குறித்து மத்திய அரசு நாளை இறுதி முடிவெடுக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ரகானே, ஹாக்கி வீரர் ரகுநாத், குத்துச்சண்டை வீரர் ஷிவா தாப்பா, லலிதா பாபர் ஆகியோரது பெயரும் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.