England vs West Indies, 2nd Test: இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஓல்ட் டிராஃபோர்டில் (Emirates Old Trafford) நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளில் இங்கிலாந்து (England) அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 21, 2020, 08:44 AM IST
England vs West Indies, 2nd Test: இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி title=

மான்செஸ்டர்: ஓல்ட் டிராஃபோர்டில் (Emirates Old Trafford) நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளில் இங்கிலாந்து (England) அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜூலை 8 ஆம் தேதி ரோஸ் பவுல் (The Rose Bowl) ஸ்டேடியத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஒருவருக்கொருவர் முதல் டெஸ்ட் போட்டியில் மோதினர். அதில் வெஸ்ட் இண்டீஸ் (West Indies) அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதனையடுத்து ஜூலை 16 ஆம் தேதி ஓல்ட் டிராஃபோர்டில் (Emirates Old Trafford) உள்ள மைதானத்தில் இரு அணிகளும் (England vs West Indies) இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினர். இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால், முதலில் இங்கிலாந்து அணி ஆடியது. 

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 469 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளர் அறிவித்தது. பென் ஸ்டோக்ஸ் (176) மற்றும் தொடக்க ஆட்டக்காரர் டோம் சிபிலி (120) ஆகியோரின் சதங்களின் பின்னணியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை 469 ரன்கள் எடுத்தது.

ALSO READ |  England vs West Indies: கொரோனா Bio-Secure கட்டுப்பாட்டை மீறிய இங்கிலாந்து வீரர்

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில், வெஸ்ட் இண்டீஸ் 287 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசியாக ஆட வந்த ஆறு வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், இங்கிலாந்துக்கு 182 ரன்கள் முன்னிலை பெற்றது.

182 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து, மூன்று விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து, ஆட்டத்தை முடித்துக்கொண்டது. அதன்பிறகு 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது.

 

வெற்றியை நோக்கி ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இருவரும் ஆரம்பத்திலேயே ஆட்டம் இழந்தனர். மதிய உணவு வரை அந்த அணி 25-3 என்ற நிலையில் தடுமாறியது. தொடர்ந்து ஆடிய வீரர்கள், இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 70.1 ஓவரில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து. 

ALSO READ |  #ENGvWI 1st Test: 143 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கும் முதல் போட்டி

இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாது போட்டியில் இங்கிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 

கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 24 ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரை கைப்பற்றும்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ALSO READ |  ENG vs WI உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக All-Rounders பட்டியலில் இணைந்த பென் ஸ்டோக்ஸ்

Trending News