மீண்டும் கிரிக்கெட் தொடருக்கு திரும்பும் அம்பத்தி ராயுடு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு தற்போது வி.ஏ.பார்த்தசாரதி கோப்பை தொடரில் விளையாடவுள்ளார்!

Updated: Aug 16, 2019, 03:56 PM IST
மீண்டும் கிரிக்கெட் தொடருக்கு திரும்பும் அம்பத்தி ராயுடு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு தற்போது வி.ஏ.பார்த்தசாரதி கோப்பை தொடரில் விளையாடவுள்ளார்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த அம்பத்தி ராயுடு தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் வி.ஏ.பார்த்தசாரதி கோப்பைகான ஒருநாள் தொடரில் கிராண்ட்ஸ்லாம் அணியின் சார்பாக  விளையாடவுள்ளார்.

இந்திய அணியில் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த அம்பத்தி ராயுடு, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கான அணியில் புறக்கணிக்கப்பட்டார். ராயுடுவிற்கு பதில் ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டார். இதனால் அணியில் இடம்பெறாததை ஒட்டி அம்பத்தி ராயுடு தேர்வு குழுவை விமர்சித்தார். இதனைத்தொடர்ந்து திடீரென ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.  

இந்நிலையில் அவர் தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் வி.ஏ.பார்த்தசாரதி கோப்பைக்கான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளார். ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கவுள்ள இத்தொடரில் அவர் கிராண்ட்ஸ்லாம் அணியின் சார்பாக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிராண்ட் ஸ்லாம் அணி தன் முதல் போட்டியில் விஜய் சிசி அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெரும் இந்திய வீரர்கள் பிற நாடுகளில் நடக்கும் டி-20 தொடர்களில் பங்கேற்பது வழக்கம். சமீபத்தில் யுவராஜ் சிங், மற்றும் மன்ப்ரீட் கோணி கனடாவில் நடைபெற்ற குளோபல் டி-20 தொடரில் பங்கேற்றனர். அதே போல் அம்பத்தி ராயுடுவும் பிற நாடுகளில் நடத்தப்படும் போட்டிகளில் பங்குபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.