2018ம் ஆண்டின் சிறந்த இளம் வீரர் விருது பெற்ற நம்பிக்கை நட்சத்திரமான ரிஷப் பந்த்

ஐசிசி-யின் 2018 ஆம் ஆண்டின் சிறந்த இளம் வீர்ர் விருது, இந்திய வீரர் ரிசப்பந்த்-க்கு கிடைத்துள்ளது. இந்த விருதை பெரும் மூன்றாவது இந்திய ஆவார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 22, 2019, 03:25 PM IST
2018ம் ஆண்டின் சிறந்த இளம் வீரர் விருது பெற்ற நம்பிக்கை நட்சத்திரமான ரிஷப் பந்த் title=

புது டெல்லி: ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை கொண்ட கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் 2018-ஆம் ஆண்டிற்கான ஐசிசி கனவு அணி, சிறந்த கேப்டன், சிறந்த வீரார்களின் பெயர் மற்றும் வீரர்களுக்கான விருது போன்றவற்றை இன்று ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான விருதுகள் (ICC Awards) செவ்வாயன்று அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விருதுகளில் இந்திய வீரர்கள் ஆதிக்கம். 2018 ஆம் ஆண்டின் சிறந்த இளம் வீர்ராக ரிசப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தவிர, கேப்டன் விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவ், பும்ரா போன்றோர்கள் ICC விருது பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

முதலில் 21 வயதான ரிஷப் பந்த் பற்றி பேசலாம். இந்தியாவின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆனா இவர் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் 49.71 சராசரியில் 696 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் இரண்டு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடங்கும். இது தவிர, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் பத்து டி-20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பன்ட் அடித்த இரண்டு சதங்களும் வெளிநாட்டு மண்ணில் அடிக்கப்பட்டது. வெளிநாடுகளில் முதல் இரண்டு சதம் எடுத்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் ஆவார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இதை செய்தார். 

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 2018 ஆம் ஆண்டில் ரிஷப் பன்ட் அறிமுகமானார். இவர் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்ஹாமில், தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதேபோல மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அக்டோபர் 21 ஆம் தேதி தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு 2017ல் அவருக்கு கிடைத்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ம் நாள் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிராக டி-20 போட்டியில் அறிமுகமானார்.

ஐசிசி-யின் 2018 ஆம் ஆண்டின் சிறந்த இளம் வீர்ர் விருது (Emerging Player of the Year) இந்திய வீரர் ரிசப்பந்த்-க்கு கிடைத்துள்ளது. இந்த விருதை பெரும் மூன்றாவது இந்திய ஆவார். சர்வதேச அளவில் இதுவரை 15 வீரர்கள் இந்த விருது பெற்றுள்ளனர். 

முதல் முறையாக 2004 ஆம் ஆண்டு இந்தியாவின் இர்பான் பதான் இந்த விருது பெற்றார். அதன பின்னர் 2013 ஆம் ஆண்டு சேதுஷ்வர் புஜாரவுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது. சேஷேஷ்வர் புஜாராக்கு பிறகு இந்த கௌரவம் பெற்ற முதல் இந்திய விக்கெட்-கீப்பர் ரிசப் பன்ட் ஆவார்

ரிசப் பன்ட், ஹசன் அலி, முஸ்தபிசூர் ரஹ்மான், ஜோஷ் ஹெஜல்வுட், கேரி பாலன்ஸ், சேதுஷ்வர் புஜாரா, சுனில் நரேன், தேவேந்திர பிஷூ, ஸ்டீவன் ஃபின், பீட்டர் சிடில், அஜந்தா மெண்டிஸ், ஷான் டெய்ட், இயன் பெல், கெவின் பீட்டர்சன், இர்பான் பத்தான் போன்றோர் ஐசிசியின் சிறந்த இளம் வீர்ர் விருதை பெற்றுள்ளனர்.

Trending News