விராட்டின் பதவி பறிக்கப்பட்டால் இந்த 3 வீரர்கள் இந்திய அணிக்கு கேப்டனாக முடியும்

டி-20 உலகக் கோப்பை 2021, டி-20 உலகக் கோப்பை 2022 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை 2023 என மூன்று உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஏதாவது ஒரு கோப்பையை விராட் கோலியால் வென்று தரமுடியாவிட்டால், அவர் கேப்டன்ஷிப் பொறுப்பை இழக்க நேரிடும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 2, 2021, 04:26 PM IST
  • ரிஷப் பண்ட் கடந்த சில மாதங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.
  • சுப்மன் கில் நன்றாக அடி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
  • ஐபிஎல் 2020 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை இறுதிபோட்டி வரை அழைத்து சென்றார்.
விராட்டின் பதவி பறிக்கப்பட்டால் இந்த 3 வீரர்கள் இந்திய அணிக்கு கேப்டனாக முடியும் title=

புது டெல்லி: தோனியை (MD Dhoni) போல தானும் இந்திய அணிக்கு ஒரு சிறந்த மற்றும் திறமையான கேப்டன் என்பதை நிரூபிக்க விராட் கோலிக்கு மிக குறைந்த காலமே உள்ளது. டி-20 உலகக் கோப்பை 2021, டி-20 உலகக் கோப்பை 2022 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை 2023 என மூன்று உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஏதாவது ஒரு கோப்பையை விராட் கோலியால் வென்று தரமுடியாவிட்டால், அவர் கேப்டன்ஷிப் பொறுப்பை இழக்க நேரிடும். 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, விராட் கோலியின் வயது 34-35 ஆக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய அணிக்கு புதிய கேப்டன் (Team India captain) தேவைப்படும். விராட் கோலிக்கு (Virat Kohli) பதிலாக இந்திய அணியின் கேப்டன் ஆகக்கூடிய 3 வலிமையான கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை குறித்து பார்ப்போம்.

ரிஷப் பண்ட் (Rishabh Pant):
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பண்ட்  ஆக முடியும். ரிஷப் பண்ட்  கடந்த சில மாதங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால்தான் மூன்று விதமான போட்டிகளிலும் (டி-20, ஒருநாள், டெஸ்ட்) அவரது இடம் உறுதி செய்யப்பட்டது. ரிஷப் பண்ட் நல்ல மனஉறுதி கொண்டவர். இவர் கேப்டன் ஆவதற்கான அனைத்து திறமைகளும் உண்டு. ஐபிஎல் (IPL) தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது சிறப்பாக செயல்பட்டார்.

ALSO READ  | TNPL 2021: CSG vs DD; சேப்பாக் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

சுப்மன் கில் (Shubman Gill):
இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் அறிமுகமானார். அந்த சுற்றுப்பயணத்தில், உலகின் சிறந்த பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸை எதிர்கொண்ட சுப்மன் கில் நன்றாக அடி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 2019 தியோதர் கோப்பையில் சுப்மன் கில் கேப்டனாக இருந்தார். இந்தியா சி அணிக்கு கேப்டனாக இருந்தபோது, ​​சுப்மன் கில் முதல் போட்டியில் 143 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் தலைமையில் இந்தியா சி அணி இறுதிப் போட்டிக்கு பயணித்தது. 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு உள்ளது.

சிரேயாஸ் ஐயர் (Shreyas Iyer):
மும்பையை சேர்ந்த 26 வயதான பேட்ஸ்மேன் சிரேயாஸ் ஐயர் 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். இவரின் கேப்டன்சிப் பற்றி பேசுகையில், ஐபிஎல் 2018 இல் டெல்லி டேர்டெவில்ஸ் (இப்போது டெல்லி கேபிடல்ஸ்) அணியின் கேப்டனாக சிரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை இறுதிபோட்டி வரை அழைத்து சென்றார். இந்த சூழலில், உலகக் கோப்பை 2023 -க்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு இவர் முக்கிய போட்டியாளராக இருப்பார்.

ALSO READ  | Tokyo Olympics: வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News