IND vs ENG 3rd Test: இங்கிலாந்து 112 ரன்னிற்கு All out, இந்தியா 3 விக்கெட் இழந்தது

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களம் இறங்கியது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 24, 2021, 11:06 PM IST
  • இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் கோலி அவுட்டானார்.
  • இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது.
  • இங்கிலாந்து அணி 112 ரன்களில் சுருண்டது
IND vs ENG 3rd Test: இங்கிலாந்து 112 ரன்னிற்கு All out, இந்தியா 3 விக்கெட் இழந்தது title=

IND vs ENG 3rd Test highlights: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களம் இறங்கியது.  

இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்ற இந்தியா, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.  

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் கோலி அவுட்டானார். இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது.

Also Read | புஜாரா இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்ற அமித் ஷாவின் விருப்பம் டக் அவுட் ஆனது 

முன்னதாக, இந்தியாவிற்கு எதிராக அடுத்தடுத்து 2 விக்கெட்டை இழந்த இங்கிலாந்து, விரைவிலேயே விக்கெட்டுகளை இழந்து, 112 ரன்னிற்கு சுருண்டது. அக்சர் பட்டேல் 6, அஸ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

அடுத்து மட்டை வீச களம் இறங்கியது. புஜாரா அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். மூன்றாவதாக கோலி அவுட் ஆனார். இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது.

மோட்டேரா மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று மாற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் போட்டி பிங்க்-பந்து டெஸ்ட் (Pink-Ball Test) போட்டியாக நடைபெறும். இந்த சிறப்பம்சங்களுடன் இந்தியாவின் வெற்றியும் மூன்றாவது சிறப்பாக பதிவாக வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆசைப்பட்டார். அதை நிறைவேற்றுவதற்கு புஜாரா இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்று அமித் ஷா வாழ்த்து கூறியிருந்தார். ஆனால் புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி, அமித் ஷாவின் ஆசையை நிராசையாக்கினார்.

ALSO READ | உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News