சென்னை: இந்தியா இங்கிலாந்து இடையில் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் டொமினிக் சிபிலி ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர். இலங்கைக்கு எதிரான முந்தைய டெஸ்ட் தொடரிலிருந்து ரூட் அருமையான ஃபார்மில் உள்ளார். ஆட்ட நேர இறுதியில் அவர் ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் எடுத்திருந்தார்.
மறுபுறம், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக திக்குமுக்காடிய சிபிலி ஃபார்முக்கு வந்து 87 ரன்களை எடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா அபாரமான ஒரு யார்க்கர் மூலம் சிபிலியை வெளியேற்றினார். ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்திருந்தது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் (Test Match) டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்வதாகக் கூறினார். தொடக்க ஆட்டக்காரர்களான ரோரி பர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிபிலி ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு திடமான தொடக்கத்தை தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்களை சேர்த்தது. ஆட்டத்தின் முதல் அமர்வு முழுவதும் இங்கிலாந்து அணியின் ஆட்டக்காரர்கள் இந்திய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தினர்.
இருப்பினும், பின்னர், பர்ன்ஸ் அஸ்வின் பந்து வீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று, பந்தை விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் (Rishab Pant) கேட்ச் பிடித்ததால் அட்டம் இழந்தார். அடுத்து வந்த டேனியல் லாவெரன்ஸ் பும்ராவின் அற்புதமான ஒரு பந்துக்கு ஆட்டமிழந்தார்.
ALSO READ: IND vs ENG முதல் டெஸ்ட் போட்டியின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
இதற்கிடையில், ரூட் மற்றும் சிபிலி மூன்றாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி மீண்டும் முன்னிலைக்கு வந்தனர். ரூட் தனது 20 வது டெஸ்ட் சதத்துடன் பல சாதனைகளையும் இன்று முறியடித்தார். 100 வது டெஸ்ட்டில் சதமடித்த மூன்றாவது இங்கிலாந்து வீரரானார் ரூட். முன்னதாக, கொலின் கவுட்ரி மற்றும் அலெக் ஸ்டீவர்ட் மட்டுமே மகத்தான இந்த சாதனையை நிகழ்த்திய மற்ற இரண்டு ஆங்கிலேயர்கள் ஆவர். இங்கிலாந்து கேப்டன் ரூட், தனது 98 வது, 99 வது மற்றும் 100 வது டெஸ்டில் சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
காயத்திலிருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பிய மூத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
முதல் டெஸ்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), ஷாபாஸ் நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட இந்தியா முடிவு செய்தது. குல்தீப்புக்கு பிளேயிங் இலெவெனில் மீண்டும் இடம் கிடைக்கவில்லை.
இருப்பினும், இந்த மூவருக்குமே இன்றைய நாள் சொல்லிக்கொள்ளும் வகையில் அமையவில்லை. ஷாபாஸ் நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் விக்கெட் எடுக்கத் தவறிவிட்டனர்.
ALSO READ: ‘நீங்கதான் உண்மையான மாஸ்டர் தி பிளாஸ்டர்’: தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்த நடராஜன்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR