இந்தியா vs ஸ்காட்லாந்து ஆட்டம்: இன்று (வெள்ளிக்கிழமை) டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் இரண்டு போட்டிகள் விளையாடப்படும். பிற்பகலில் நியூசிலாந்து-நமீபியா அணிகள் மோதும் நிலையில், இந்தியா - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து (India and Scotland) அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதுகின்றன. மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து, குரூப்-2 புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்திய அணி, இந்தப் போட்டியில் அபார ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம். எனினும், வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் ஆட்டத்தை பொறுத்தே இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. மறுபுறம், ஸ்காட்லாந்து தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து அரையிறுதி போட்டியில் இருந்து வெளியேறியது.
இந்தியா-ஸ்காட்லாந்து ஆடும் மைதானம் எப்படி இருக்கும்:
சூப்பர்-12 சுற்றில், துபாய் மைதானத்தில் (Dubai International Stadium) இதுவரை 9 போட்டிகள் நடந்துள்ளன. இங்கு பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். துபாயில் ரன்களை எடுக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். ஆனால், இந்த மைதானத்தில் நடந்த கடைசிப் போட்டியில் நியூசிலாந்து அணி 170 ரன்களைக் கடந்தது. அதே சமயம், மிடில் ஓவரில் பந்து வீசும் ஸ்பின்னர்கள் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை ஏற்படுத்தலாம்.
ALSO READ | IND vs SCO: இன்று Do Or Die மேட்ச்.. அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா?
இந்தியா தனது முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக துபாயில் விளையாடியது மற்றும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த மைதானத்தில் டி20 சர்வதேசப் போட்டிகளில், சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 143 ஆகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 124 ஆகவும் உள்ளது. இந்திய அணி நிலைமைகளை நன்கு உணர்ந்து ஸ்காட்லாந்திற்கு எதிராக சரியான வியூகம் வகுத்து, அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் மனநிலையிலும் களம் இறங்கும்.
இன்று துபாய் வானிலை எப்படி இருக்கும்:
வெள்ளிக்கிழமை துபாயில் வானிலை (Dubai Weather Forecast) வெப்பமாக இருக்கும், மாலையிலும் வெப்பத்தின் தாக்கம் இருக்கும். இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து இடையேயான போட்டியின் போது வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். வீரர்கள் ஈரப்பதத்தை தாங்கிக்கொள்ள வேண்டும். இது 60 சதவீதத்திற்கு அருகில் இருக்கும். மணிக்கு 8-10 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். வானிலை தெளிவாக இருக்கும், மழைக்கு 2% மட்டுமே வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், பனியும் போட்டியில் முக்கிய பங்கு வகிக்க முடியும். இதுபோன்ற சூழ்நிலையில், டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.
ALSO READ | சின்னதா ஒரு டான்ஸ் ஸ்டெப்ஸ் போட்ட விராட் கோலி.. வைரலாகும் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR