ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இறுதி பந்தில் தனது வெற்றியை தவறவிட்டது!
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Australia win a thriller here at Vizag
Win by 3 wickets in the 1st T20I https://t.co/qKQdie3Ayg #INDvAUS pic.twitter.com/hMwOZbWjY2
— BCCI (@BCCI) February 24, 2019
இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய வீரர் ரோகித் ஷர்மா 5(8) ரன்களில் வெளியேற, மறுமுனையில் இருந்து லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 24(17) ரன்களில் வெளியேறினார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய டோனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் 3 விக்கெட்டுகளை குவித்தார்.
இதனையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆர்க்கி சார்ட் 37(37), மார்கஸ் ஸ்டோனிக்ஸ் 1(5) ரன்களில் வெளியேற இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். எனினும் கெளன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 56(43) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். இவரது விக்கெட்டை இழந்த நிலையில் அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர், ஒரு கட்டத்தில் இந்தியாவின் வெற்றி உறுதியானது. இறுதி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற நிலைக்கு ஆஸி., தள்ளப்பட்டது.
ஆஸி., அணி 7 விக்கெட்டை இழந்து பேட் கும்மிஸ் 7(3), ரிச்சாட்ஸன் 7(3) ஆகியோரை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றி இலக்கை நோக்கி போராடியது.
ரசிகர்களை இருக்கையின் முனையில் உட்கார வைத்த இந்த போட்டியின் இறுதி பந்தில் ஆஸித்திரேலியா வெற்றி இலக்கை எட்டியது. இந்தியா தரப்பில் ஜாஸ்பிரிட் பூம்ரா 3 விக்கெட்டுகளை குவித்தார்.
இப்போட்டியின் வெற்றியின் மூலம் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி., 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.