இந்தியாவிற்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸி!

இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated: Jan 12, 2019, 11:44 AM IST
இந்தியாவிற்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸி!
Pic Courtesy : @cricketcomau

11:39 12-01-2019

பீட்டர் ஹான்ஸ்கோம்பின் அதிரடி ஆட்டத்தால் ஆஸி., அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்துள்ளது. 

இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் குவித்து ஆஸ்., ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்!


11:17 PM - 11 Jan 2019

254 ரன்களில் 5-வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி...  


10:28 AM - 11 Jan 2019

186 ரன்களில் 4-வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி... 


09:48 AM - 11 Jan 2019

136 ரன்களில் மூன்றாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி... 


08:34 PM - 11 Jan 2019 

116 ரன்களில் தனது இரண்டாவது விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலியா அணி...


6:31 PM - 12 Jan 2019

8 ரன்களிலேயே முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி


முதல் ODI தொடரில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து பேட்டிங் செய்து வருகிறது........  

தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண் வரும் இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி இந்த ஆண்டு சனவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில்  டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி ஜனவரி 12 ஆம் தேதி (இன்று) முதல் துவங்கி ஜனவரி 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்க உள்ளது. 

ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில், அந்நாட்டுக்கு எதிரான டி20 தொடரை சமநிலையிலும், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய உற்சாகத்தில் உள்ளது. ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. அதேவேளையில் ஆஸ்திரேலியா அணி, தனது சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால், அதற்கு பலி தீர்க்க ஆயுத்தமாகி வருகிறது. 

இதையடுத்து, இன்றைய முதல் ODI தொடரில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது...