டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

Last Updated : Sep 12, 2016, 01:38 PM IST
டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு title=

நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் விளையாட உள்ளது. நியூசிலாந்து அணி இம்மாதம் இந்தியா வர உள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி செப்டம்பர் 16ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆட உள்ளது. பிறகு இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

 

 

நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இந்திய அணி வீரர்களை சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர். இதில் 15 பேர் கொண்ட இந்திய அணியினை தேர்வு குழுத் தலைவர் சந்தீப் படேல் மும்பையில் அறிவித்தார்.

 

 

வீரர்கள் பெயர் விவரங்கள்:-

விராட் கோலி(கேப்டன்) முரளி விஜய், ரோகித் சர்மா, அஸ்வின், புஜாரா, ராகுல் ரஹானே, விருத்தமான சகா, ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், ஷிகார் தவான், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ்.

 

 

Trending News