இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நாயகனாக ஷிகார் தவான் தேர்ந்தெடுக்கப்ட்டார். மொத்தம் 4 இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு நான் ஹாங்காங்கில் நான் விடுமுறைக்கு கழித்து கொண்டு இருந்தேன். காயம் காரணமாக ஆட முடியாமல் இருந்தேன்.
ஆனால் இந்த தொடரில் விளையாடுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இப்போது நான் எனது பேட்டிங் அனுபவித்து வருகிறேன், ஏனென்றால் எல்லா நன்றாக ஆடி வருகிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கு என ஷிகார் தவான் கூறினார்.
மேன் ஆப் மேட்ச் ஹார்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்ட்டார். இவர் 3_வது டெஸ்ட் போட்டியில் கடைசி விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 96 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். மேலும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
நான் என் முதல் சதத்தை அடித்தலில் மகிழ்ச்சி அடைகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் இடம் பிடிப்பது ஒரு எளிதான காரியம் இல்ல. டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச அனுமதி கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அணி வீரர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள் என ஹார்திக் பாண்டியா தெரிவித்தார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் சனிக்கிழமை அன்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் ஷிகார் தவான்(119) மற்றும் ஹார்திக் பாண்டியா(108) இருவரின் சதத்தால் 487 ரன்கள் எடுத்தது ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லக்ஷன் சந்தானன் 5 விக்கெட்டும், மாலிண்டா புஷ்பகுமார 3 விக்கெட்டும், விஷவா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும்,
2-வது டெஸ்டில் இந்தியா அணியும் வெற்றி பெற்றதுள்ளது. இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ளார்.
கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட தால் மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விளையாட மாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இரண்டு போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.வருகிற 17-ம் தேதி மும்பையில் ஆஸ்திரேலிய அணி மற்றும் இந்திய ‘ஏ’ அணி பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. ஆஸ்திரேலிய அணி நேற்று மும்பை வந்தது. தெற்கு மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலிய அணியினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் பிப்., 23-ம் தேதி
2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ம் தேதி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது
ஹோபர்ட்டில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 85 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்தது. 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 161 ரன்னில் மீண்டும் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு சார்பில் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு சார்பில் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 242 ரன்களும், ஆஸ்திரேலியா 244 ரன்களும் எடுத்தன.தனது 2_வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 540 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 318 ரன்களும், நியூசிலாந்து 262 ரன்களும் எடுத்தன. 56 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
இந்த நிலையில், 5-வது மற்றும் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வந்தது. நியூசிலாந்து அணி 236 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 318 ரன்களும், நியூசிலாந்து 262 ரன்களும் எடுத்தன. 56 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 434 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 37 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 93 ரன்களுடன் அன்றைய ஆட்டம் முடிவு பெற்றது.
நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் விளையாட உள்ளது. நியூசிலாந்து அணி இம்மாதம் இந்தியா வர உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி செப்டம்பர் 16ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆட உள்ளது. பிறகு இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி நேற்று வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு சென்றது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்ற பிறகு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.