இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் மழை பெய்ததால், ஈரப்பதம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
நண்பகலில் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. எனவே இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது
முதல் ஓவரில் இலங்கை வீரர் லக்மால் வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார் இந்திய தொடக்க வீரர் ராகுல்(0). இதனால் இந்தியா முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழக்க நேரிட்டது. பின்னர் இந்திய வீரர் புஜாரா மற்றும் தவான் சேர்ந்து ஆடினார்கள். லக்மால் வீசிய 7_வது ஓவரில் ஷிகர் தவான் 8 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார். இந்திய அணி 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை வந்தததால், ஆட்டம் கைவிடப்பட்டது.
சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. புஜாராவுடன் ஜோடி சேர்ந்த இந்திய கேப்டன் விராத் கோலி 10.1 ஓவரில் லக்மால் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இந்திய அணி 17 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்துள்ளது.
தற்போது புஜராவுடன் மற்றும் அஜிங்கியா ரஹானே விளையாடி வருகின்றனர். 11.5 ஓவருக்கு இந்திய அணி 17 ரன்கள் எடுத்த நிலையில், மைதனாத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது.
UPDATE - Play has been interrupted due to bad light #INDvSL
— BCCI (@BCCI) November 16, 2017