இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்ற நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மும்பை வான்கேட் மைதானத்தில் நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்தது. தொடக்க வீரங்கனைகளாக களமிறங்கிய எமி ஜோன்ஸ் 3(6), தாம்ஸின் பியோமென்ட் 20(42) ரன்களில் வெளியேற இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து வெளியேறினர். நாட்டியாலா சேச்விர் மட்டும் நிதானமாக விளையாடி 85(109) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். எனினும் ஆட்டத்தின் 43.3-வது பந்தில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 161 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. இந்தியா தரப்பில் கோசுவாமி மற்றும் சிக்கா பாண்டே தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.
India go 2-0 up with a seven-wicket win!
Smriti Mandhana's half-century and 47* from Mithali Raj lead the chase after four wickets each from Jhulan Goswami and Shikha Pandey helped set up victory against England in Mumbai.#INDvENG scorecard https://t.co/YQJ27YTgUQ pic.twitter.com/aqi3LvYShX
— ICC (@ICC) February 25, 2019
இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரங்கனை ஜாம்மியா 0(10) ரன் ஏதும் இன்றி வெளியேற மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஸ்மிரித்தி மந்தனா 63(74) ரன்கள் குவித்து வெளியேறினார். இவருக்கு துணையாக பூனம் ராவட் 32(65), மித்தாலி ராஜ் 47(69) ரன்கள் குவித்தனர். இந்நிலையில் ஆட்டத்தின் 41.1 ஓவர் முடிந்த நிலையில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இந்தியா அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 3 ஒருநாள் போட்டிக்கள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்தியா வென்றுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் பிப்ரவரி 28-ஆம் நாள் நடைபெறுகிறது.