ஆசிய விளையாட்டுகள் 2018 போட்டியின் 10m Air Pistol பிரிவில் இந்தியாவின் சௌரப் சௌத்ரி தங்கம் வென்றுள்ளார்!
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுமார் 45 நாடுகள் பங்கேற்றுள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.
ஆசிய விளையாட்டு போட்டிகளின் மூன்றாம் நாளான இன்று நடைப்பெற்றற 10m Air Pistol பிரிவில் 240.7 புள்ளிகள் பெற்று இந்தியாவின் சௌரப் சௌத்ரி தங்கம் வென்றுள்ளார். இது இந்தியாவிற்கு கிடைத்துள்ள 3-வது தங்கம் ஆகும்.
10m air pistol: India's Saurabh Chaudhary wins gold medal, Abhishek Verma wins bronze medal #AsianGames2018 pic.twitter.com/AFxoRrYVOn
— ANI (@ANI) August 21, 2018
இதற்கு முன்னதாக மல்யுத்தம் பிரிவில் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் இருவரும் தங்கம் வென்றனர் என்பதுக குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. 18 தங்கம் உள்பட 40 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தில் உள்ளது.