ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக், கலீல் அஹ்மத் நீக்கம்

ஆஸ்திரேலியவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Feb 15, 2019, 08:28 PM IST
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக், கலீல் அஹ்மத் நீக்கம்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிராக இரண்டு டி-20 போட்டி, மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.

இந்தநிலையில் இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் டி-20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் கலீல் அஹ்மத் ஆஸ்திரேலியவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தய வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு டி-20 மற்றும் முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

ஓய்வு அளிக்கப்பட்டிருந்த இந்திய கேப்டன் விராட் கோலி, மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் அனைத்து போட்டிகளிலும் இடம் பெற்றுள்ளார். அதேபோல தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் அனைத்து போட்டோயிலும் இடம் பெற்றுள்ளார்.

முதல் இரண்டு ஒரு நாள் போட்டியிலும், அடுத்து மூன்று ஒருநாள் போட்டியிலும் ஆடும் வீரர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டி அணி விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், கே.எல். ராகுல், எம்.எஸ்.தோனி (கீப்பர்), ஹார்டிக் பாண்டியா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ஜாஸ்ப்ரிட் பும்ரா, முகம்மது ஷமி, யூஜெவேந்திர சாஹால், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிசப் பன்ட், சித்தார்த் கவுல்.

 

கடைசி மூன்று ஒருநாள் போட்டி அணி விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், கே.எல். ராகுல், எம்.எஸ்.தோனி (கீப்பர்), ஹார்டிக் பாண்டியா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ஜாஸ்ப்ரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகம்மது ஷமி, யூஜெவேந்திர சாஹால், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிசப் பன்ட்.