ஐபிஎல் 2017: பிராவோ-வுக்கு பதிலாக இர்பான் பதான்?

Last Updated : Apr 25, 2017, 02:09 PM IST
ஐபிஎல் 2017: பிராவோ-வுக்கு பதிலாக இர்பான் பதான்?

10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 

குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த வெய்ன் பிராவோ காயம் காரணமாக ஒரு போட்டிகள் கூட ஆடாமல் இருந்தார். மேலும், காயம் சரியாகாததால் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக தன்னுடைய சொந்த நாட்டிற்கு அவர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், பிராவோவின் இடத்தை நிரப்ப இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் இர்பான் பதானை தேர்ந்தெடுத்து குஜராத் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 

More Stories

Trending News