10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் தொடரின் 30-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
முதலில் விளையாடிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 51 ரன்கள் எடுத்தார். ரகானே (46), திரிபாதி (38) ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் நரேன் 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பின்னர் காம்பீர் உடன் உத்தப்பா இணைந்து 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.
அதிரடியாக விளையாடிய உத்தப்பா 47 பந்துகளில் 87 ரன்களில் எடுத்திருந்த போது அவுட்டானார். அவரை தொடர்ந்து காம்பீரும் 62 ரன்களில் அவுட்டானார். இறுதியில் கொல்கத்தா அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.