ஐபிஎல் 2017, போட்டி 42: டெல்லி டேர்டெவில்ஸ்- குஜராத் லயன்ஸ் பலப்பரீட்சை

Last Updated : May 4, 2017, 04:56 PM IST
ஐபிஎல் 2017, போட்டி 42: டெல்லி டேர்டெவில்ஸ்- குஜராத் லயன்ஸ் பலப்பரீட்சை title=

ஐபிஎல் போட்டி தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வி கண்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடைசி ஆட்டத்தில் ஐதராபாத்தை வென்றதன் மூலம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளது. அதாவது எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அது முடியும். ஒன்றில் தோற்றாலும் நடையை கட்ட வேண்டியது தான். 

எனவே இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 

குஜராத் லயன்ஸ் 10 ஆட்டங்களில் 3 வெற்றி, 7 தோல்வியை சந்தித்து 6 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் குஜராத் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு மிக குறைவு. மற்ற அணிகளின் ரன்ரேட்டை பொறுத்தே குஜராத் அணி அடுத்த சுற்றுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். மற்றபடி அந்த அணி இனி புள்ளி பட்டியலில் கவுரவமான நிலையை அடைய முயற்சிக்கும். 

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டி சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

 

/p>

Trending News