10-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதி சுற்று போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின.
இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை எடுத்து கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐ.பி.எல் டி20 சீசன் 10 தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதனை தொடா்ந்து நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியுடன், மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.