அடுத்த வருடம் நடைபெறவுள்ள IPL 2019-கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்து முடிந்தது. 351 வீரர்கள் கலந்துக்கொண்ட இந்த ஏலத்தில் 60 வீரர்கள் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கியது மற்றும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் நிலவரம் குறித்து பார்போம். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்கள், அதிகபட்சமாக 25 வீரர்களை வைத்துக்கொள்ள முடியும்.
இந்தநிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2019 சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடப்போகும் வீரர்கள் பற்று தெரிந்துக்கொள்வோம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 13 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 21 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.
ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. கார்லோஸ் ப்ரைத்வாட்
2. லாகி ஃபெர்குசோன்
3. ஜோ டென்லி
4. ஹாரி கர்னி
5. நிகில் ஷங்கர் நாக்
6. ஸ்ரீகாந்த் முண்டே
7. ப்ரித்வி ராஜ் யர்ரா
8. அனிராக் நார்டேஜ்.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், ஆண்ட்ரே ரசல், சுனில் நாரைன், ஷுப்மான் கில், பிரசித் கிருஷ்ணா, ஷிம்மா மாவி, நிதீஷ் ராணா, கமலேஷ் நாகர்கோதி, ரிங்க்கு சிங், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா.
This is what the purple and gold brigade looks like for #IPL2019 #ComeHome2KKR #IPLAuction #KorboLorboJeetbo pic.twitter.com/gtd87dyM3e
— KolkataKnightRiders (@KKRiders) December 18, 2018