IPL 2021: CSK vs KKR: டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது

மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கும் CSK vs KKR போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 21, 2021, 07:03 PM IST
  • IPL 2021 இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
  • டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது.
  • தனது மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை அதிரடியாக வென்றது CSK.
IPL 2021: CSK vs KKR: டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது title=

IPL 2021, CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று இந்த IPL பதிப்பில் தனது நான்காவது போட்டியில் ஆடவுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று CSK அணி எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாகும். மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கும் இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.

தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்சை எதிர்த்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தோல்வியுற்றது. 

இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆடிய CSK அணி தனது வழக்கமான அதிரடி பாணியில் ஆடி, எளிதாக வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் (Rajasthan Royals) அணியை சுலபமாக தோற்கடித்தது சென்னை அணி. இன்று நடக்கவிருக்கும் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால், அணிகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும். 

IPL வரலாற்றிலேயே சென்ற ஆண்டுதான் சென்னை ப்ளே-ஆஃப்களுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

IPL-லில் பங்கெடுக்கும் அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக CSK இருந்துள்ளது. துவக்க ஆண்டு முதலே, தோற்கடிக்க மிகவும் கடினமான அணி என்ற பெருமையை பெற்றுள்ளது CSK அணி.

ALSO READ: IPL 2021: 'ஜடேஜாவின் லெவலுக்கு பந்து அவர தேடி வரும்', வைரல் ஆன தோனியின் 8 ஆண்டு பழைய ட்வீட்

கடந்த ஆண்டு மிக மோசமாக ஆடிய CSK அணி, இந்த ஆண்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முற்றிலுமாக பூர்த்தி செய்யும் என நம்பப்படுகின்றது. 

மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணிக்கு இது முக்கியமான போட்டியாகும். மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான இரு போட்டிகளில் தோற்ற கொல்கத்தா அணிக்கு இன்று நடக்கவிருக்கும் போட்டியில் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியமாகிறது. மறுபுறம், தொடர்ந்து இரு போட்டிகளில் எளிதாக வெற்றி பெற்று உற்சாகத்தின் உச்சியில் இருக்கும் சென்னை அணி முழு உறுதியுடன் இந்த போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும். 

 

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளின் விவரம் இதோ:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

எம்.எஸ். தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, சேதேஸ்வர் புஜாரா, கர்ன் சர்மா, இம்ரான் தாஹிர், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், கிருஷ்ணப்ப கவுதம், மிட்செல் சாண்ட்னர், ரவிஸ்ரினிவாசன் சாய் கிஷோர், ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், கே.எம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: எயோன் மோர்கன் (கேப்டன்), நிதீஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, எயோன் மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், வருண் சக்ரவர்த்தி, பிரசீத் கிருஷ்ணா, சுனில் ஃபெரின் 

ALSO READ: KKR vs CSK: இன்றைய போட்டியில் ஆடக்கூடிய 11 வீரர்களின் பட்டியல் கணிப்பு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 

செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News