IPL 2024 SRH Vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரு அணிகளும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. ஐபிஎல் 2024 சீசனில் இரு அணிகள் மோதும் நான்காவது போட்டி இதுவாகும். ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் 2 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.204 என புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 3 போட்டிகளில் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. மேலும் நிகர ரன் ரேட் +0.976 என ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பின்னர் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2024 சீசனில் முதல் போட்டியில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் ஆரவாரமான தொடக்கத்தை அளித்தது. முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, மூன்றாவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேருக்கு நேர் விவரம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே அணி 14 போட்டியிலும், ஐதராபாத் அணி 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. சென்னைக்கு எதிராக ஐதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 192 ஆகும். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சென்னையின் அதிகபட்ச ஸ்கோர் 223 ஆகும். இரு அணிகளும் மோதிய கடைசி ஐந்து போட்டிகளில் நான்கில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
மேலும் படிக்க - முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக சென்னை அணியில் இடம் பெறப்போவது யார்?
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம் எப்படி? யாருக்கு சாதகம்
இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டுமே ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்துள்ளது. இந்த மைதானத்தில் நடந்த போட்டியில் ரன் மழை பெய்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி 277 ரன்கள் எடுத்திருந்தது. இது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். ஹென்ரிச் கிளாசென் 80 ரன்களும், அபிஷேக் சர்மா 63 ரன்களும், டிராவிஸ் ஹெட் 62 ரன்களும் எடுத்தனர்.
நாளை வெள்ளியன்று நடக்கும் போட்டியிலும் இதேபோன்ற அதிரடியை காணலாம். ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் அளிக்காது. இங்குள்ள தட்டையான ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கமாக கருதப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் விவரம்
டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே, டேரில் மிட்செல், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா.
மேலும் படிக்க - IPL 2024: ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பவுலர்... இந்த அணிக்கு கட்டம் சரியில்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ