ஐபிஎல் 2023-ன் 26 ஆவது போட்டியான இன்று ராஜஸ்தான் ராயல் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ட்ன்ஸ் அணியும் விளையாடின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இரண்டு அணிகளும் தங்களது முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தன. மேலும் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளதால் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இந்த போட்டியின் மீது இருந்தது.
முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெய்ட்ன்ஸ் அணி ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டது. முதல் ஐந்து ஓவருக்கு 32 ரன்கள் மட்டுமே லக்னோ அணி அடித்தது. கேஎல் ராகுல் மற்றும் மயேர்ஸ் மிகவும் ஒரு பொறுமையான துவக்கத்தை கொடுத்தனர். கேஎல் ராகுல் கொடுத்த மூன்று கேச்சுகளை ராஜஸ்தான் தவறவிட்டது. பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற நோக்கில் கேஎல் ராகுல் அதிரடியாக ஆட ஆரம்பித்த சில மணித்துளிகளில் ஆட்டமிழந்து வெளியேறினார். மேயர்ஸ் 42 பந்துகளில் 51 ரன்கள் அடித்து வெளியேறினார். பதானி மற்றும் தீபக் ஹூட சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.
கடைசியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் சிறிது அதிரடி காட்ட லக்னோ சூப்பர் ஜெய்ட்ன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெடுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே அடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் அஸ்வின் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெடுகளை வீழ்த்தினார். சிறிது எளிமையான இலக்கை எதிர்த்து களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மெதுவான தொடக்கத்தையே கொடுத்தனர். இருப்பினும் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது.
154 to
Need our bowlers to Halla Bol in the seconLSG | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG | #GazabAndaz pic.twitter.com/BlB2BJtdAS— Lucknow Super Giants (@LucknowIPL) April 19, 2023
ஜெய்ஸ்வால் 44 ரன்களும், பட்லர் 40 ரன்களும் அடித்து ஸ்டோனிஸ் பந்தில் வெளியேறினர். கேப்டன் சஞ்சு சாம்சன் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார், இது போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஜெய்ப்பூர் மைதானம் மற்ற மைதானங்களை விட சற்று பெரியது என்பதால் இங்கு சிக்ஸர்கள் அடிப்பது சிரமமாக இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மயர் இரண்டு ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். கடைசி கட்டத்தில் படிக்கல் மற்றும் ரியான் பராக் அதிரடியாக ஆடியும் ராஜஸ்தான் அணியால் வெற்றி பெற முடியவில்லை. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆவேஸ் கான் சிறப்பாக பந்துவீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் இந்த போட்டியில் லக்னோ அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
HSG | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG | #GazabAndaz pic.twitter.com/mD2dLjx0Bx
— Lucknow Super Giants (@LucknowIPL) April 19, 2023
மேலும் படிக்க: ஆர்சர், பும்ரா இடத்தை நிரப்பிய அர்ஜுன்... மும்பையின் எதிர்காலம் இவர் தானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ