ஒரு நாளுக்கு 5 கோடி வருமானமா விராட் கோலிக்கு?

Last Updated : Apr 2, 2017, 01:03 PM IST
ஒரு நாளுக்கு 5 கோடி வருமானமா விராட் கோலிக்கு? title=

இந்திய பிரபலங்களில் விளம்பரங்களில் நடிக்க அதிகச் சம்பளம் வாங்குபவர்களில் கிரிக்கெட் வீரர் விராத் கோலி என்றால் நம்ப முடிகின்றதா? சென்ற ஆண்டு வரை முதல் இடத்தில் இருந்து வந்த தோனியை பின்னுக்குத்தள்ளி கோலி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கோலி ஒரு நாளைக்கு 2.5 கோடி, 4 கோடி எனச் சம்பளம் பெற்றுவந்துள்ளார். இப்போது கோல நிறுவனமான பெப்ஸிகோ நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க இவருக்கு ஒரு நாளைக்கு 5 கோடிகள் வரை அளிக்கத் தயாராக இருக்கின்றனர். 

பெப்ஸியுடனான ஒப்பந்தம் விராத் கோலியை விளம்பரத்திற்காகப் புக் செய்யும் கார்னர் ஸ்டோன் என்ற நிறுவனம் பெப்சிகோ நிறுவனத்துடனான ஒப்பந்தம் பற்றிக் கருத்து கூற மருப்புத் தெரிவித்துவிட்டது. 

பெப்ஸிகோ நிறுவன விளம்பரங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தம் விராத் கோஹ்லிக்கு எப்ரல் 30-ம் தேதி வரை இருக்கின்றது என்றும், அதனை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. 

பொதுவாக ஒருவரை நிறுவனங்கள் விளம்பரத்திற்காக ஒப்பந்த செய்யும் போது ஆண்டுக்கு 2 முதல் நான்கு நாட்கள் வரை ஒப்பந்த செய்யும் என்றும், ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் என்றால் 20 கோடிகள் வரை செலவாகும் என்று சில நிறுவனங்கள் தயங்குகின்றன என்றும் கூறப்படுகின்றது. 

சென்ற ஆண்டு முதல் முறையாகக் கோலி ஜெர்மன் ஸ்போர்ட்ஸ் நிறுவனமான பூமா 8 வருடத்திற்கு 110 கோடி ரூபாய் கொடுத்து புக் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் ஆர்டி கார், எம்ஆர்எப், டிஸ்கான் வாட்ச், ஜியோனி போன், பூஸ்ட், கோல்கேட், விக்ஸ் உள்ளிட்ட 18 நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். 

இந்நிலையில் உலக அளவில் விளையாட்டு வீரர்களில் 92 மில்லியன் டாலர் வருமானத்துடன் கோலி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 

Trending News