லோதா கமிட்டி-பிசிசிஐ வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

Last Updated : Dec 15, 2016, 05:24 PM IST
லோதா கமிட்டி-பிசிசிஐ வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் title=

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த 6-வது ஐ.பி.எல் பிரிமியர் தொடரில் சூதாட்டம் வெடித்தது. இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, அசோக் 

பிகான், ரவீந்தரன் அடங்கிய மூவர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு, இந்திய கிரிக்கெட் போர்ட் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த 159 பக்கங்கள் கொண்ட தனது பரிந்துரையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை பிசிசிஐ மற்றும் சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்க மறுத்தன. 

லோதா கமிட்டியின் சிபாரிசுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனை எதிர்த்து லோதா கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில் லோதா கமிட்டி சிபாரிசுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது. எனவே இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை அனைவரையும் டிஷ்மீஸ் செய்ய வேண்டும். சிறப்பு பார்வையாளராக ஒருவரை நியமிக்கவேண்டும். அதோடு அவருக்கு தணிக்கை, ஊழியர்கள்  நியமன அதிகாரங்களை வழங்கவேண்டும் போன்ற பரிந்துரைகளை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது.

லோதாகுழுவின் பரிந்துரைகள் தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிசிசிஐ நிர்வாகி பதவிக்கு தகுந்த நபரை ஒரு வாரத்திற்குள் நியமிக்க வேண்டும் என்றும், பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முன்பு லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தும் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News