சின்சினாட்டி மாஸ்டர்ஸ், சாம்பியன் பட்டம் வென்றார் மேடிசன் கீஸ்!

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் சாம்பியன் பட்டம் வென்றார்!

Updated: Aug 20, 2019, 07:14 AM IST
சின்சினாட்டி மாஸ்டர்ஸ், சாம்பியன் பட்டம் வென்றார் மேடிசன் கீஸ்!

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் சாம்பியன் பட்டம் வென்றார்!

அமெரிக்காவில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைப்பெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் மெட்விதேவ், டேவிட் கோபினை (பெல்ஜியம்) எதிர்கொண்டார். 

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மெட்விதேவ் 7-6 (7-3), 6-4 என்ற நேர்செட்டில் டேவிட் கோபினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த பட்டத்தை மெட்விதேவ் வெல்வது இதுவே முதல்முறையாகும். 

இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் மெட்விதேவ் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுளார். இதன் மூலம் 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு ‘டாப்-5’ தரவரிசையில் இடம் பிடித்த முதல் ரஷிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட டேவிட் கோபின் 4 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 15-வது இடத்தை பிடித்துள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், 34 வயதான ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவை (ரஷியா) எதிர்கொண்டார். பரபரப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 7-5, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் குஸ்னெட்சோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் கைப்பற்றினார். 

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் மேடிசன் கீஸ் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி மீண்டும் டாப்-10 வரிசைக்குள் இடம் பிடித்தார். தோல்வி அடைந்த குஸ்னெட்சோவா 153-வது இடத்தில் இருந்து 62-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.