நார்வேயில் நடைபெற்ற குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடர் நடந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்வீரர் பிரக்ஞானந்தா கலந்துகொண்டார். மொத்தம் 9 சுற்றுக்கள் நடந்த போட்டியில் 6 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் டிரா என 7.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கூகுள், அமேசான், ஏர்டெல்... ஐபிஎல் உரிமையை கைப்பற்றப்போவது யார்?
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா தற்போது நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார். வெற்றிகளும், புகழ் மாலைகளும் மென்மேலும் குவியட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னைச் சிறுவன் @rpragchess, தற்போது #NorwayChess தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார்.
வெற்றிகளும் புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும்! https://t.co/fGt7NJGeNq
— M.K.Stalin (@mkstalin) June 11, 2022
முன்னதாக, விஸ்வநாதன் ஆனந்த் பிரக்ஞானந்தாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து 'அண்ணனுடன் செஸ் தம்பிகள் இரவு உணவுக்கு செல்கின்றனர்' என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 187 நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
The “ chess thambis” out for dinner with Anna !! @aicfchess #chennaichessolympiad pic.twitter.com/NbHJ8lLwnu
— Viswanathan Anand (@vishy64theking) June 10, 2022
இந்த செஸ் தொடருக்கான லோகோவை கடந்த ஜூன் 9ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த தொடருக்கான குதிரை உருவம் கொண்ட சின்னம் ஒன்றையும் வெளியிட்ட அவர், அதற்கு 'தம்பி' என பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டார். இதை குறிப்பிடும் வகையில்தான் விஸ்வநாதன் ஆனந்த், 'செஸ் தம்பிக்கள்' என ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR