ஓய்வுக்குப் பிறகும் தோனி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக முடியாது..! காரணம் இதுதான்!

MS Dhoni: தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA20 லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்தமான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. இந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முன்பு விளையாடிய பாப் டூப்ளசிஸ் கேப்டனாக உள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 19, 2023, 05:42 PM IST
ஓய்வுக்குப் பிறகும் தோனி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக முடியாது..! காரணம் இதுதான்! title=

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருந்த எம்.எஸ்.தோனி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபில் மற்றும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கோப்பைகளை வென்றிருக்கிறது. தற்போது 40 வயதுக்கு மேலாகும் எம்.எஸ்.தோனி இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியுடன் கள கிரிக்கெட்டுக்கு முழுமையாக விடை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | இந்திய அணியில் கேள்விக்குறியாகும் பும்ராவின் இடம்? இனி வாய்ப்பு கிடைக்குமா?

அதன்பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் அல்லது ஏதேனும் நிர்வாக பொறுப்புகளில் அமர்த்தப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இந்த சூழலில் முக்கியமான தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றாலும், தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA20 லீக் உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களில் அவரால் பணியாற்ற முடியாது என கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்கா SA20 லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு சொந்தமான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. இந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய பாப் டூபளசிஸ் கேப்டனாக உள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்காலத்தில் வழிகாட்டியாக தோனி செயல்படுவார் என கூறப்படும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அவர் ஆலோசனை சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்காது. ஏனென்றால் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் மற்றும் நிர்வாக பொறுப்புகளில் இருப்பவர்கள் வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க முடியாது. 

அப்படி செயல்பட வேண்டும் என்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்துடனான அனைத்து விதமான தொடர்புகள் மற்றும் சலுகைகளையும் முறித்து கொண்டால் மட்டுமே மற்ற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க முடியும். அந்த வகையில் பார்த்தால் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான தொடர்பையும் முறித்து கொண்டால் மட்டுமே SA20 லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்தமான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனது பங்களிப்பை கொடுக்க முடியும். இதனால், இத்தகைய கடினமான முடிவை தோனி எடுப்பாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. 

மேலும் படிக்க | IND vs NZ: ஒரு இரட்டை சதத்தில் இத்தனை சாதனைகள் முறியடிப்பா? தில்லாக நிற்கும் கில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News