நியூசிலாந்து அணி பயிற்சியாளர் மைக் ஹெசான் திடீர் ராஜினாமா!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசான் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க பதவியை திடீர் என ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்!!

Last Updated : Jun 8, 2018, 01:30 PM IST
நியூசிலாந்து அணி பயிற்சியாளர் மைக் ஹெசான் திடீர் ராஜினாமா!! title=

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசான் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க பதவியை திடீர் என ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மைக் ஹஸ்சன், கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 6 ஆண்டுகள் சிறப்பான பங்களிப்பை அளித்த வந்த ஹஸ்சன், அடுத்த மாதத்துடன் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு வரை மைக் ஹஸ்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், அதற்குள் தனது பதவியை அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

ஓய்வு குறித்து பேசிய மைக் ஹஸ்சன், தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவதால் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்று கொண்டுள்ளது.

 

Trending News