ஒரு பந்தில் 7 ரன்கள் அடித்த நியூஸிலாந்து அணி!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி ஒரு பந்தில் 7 ரன்கள் அடித்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2022, 02:39 PM IST
  • முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
  • ஓவர் துரோவின் மூலம் பங்களாதேஷ் அணி ஒரே பந்தில் 7 ரன்களை அடிக்க விட்டது.
 ஒரு பந்தில் 7 ரன்கள் அடித்த நியூஸிலாந்து அணி!  title=

நியூசிலாந்து (Newzeland) நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் நியூஸிலாந்து அணி இருந்தது. இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் தொடங்கியது.

ALSO READ | ஐபிஎல் 2022: ஹர்ஷல் படேலை RCB ஏன் தக்கவைக்கவில்லை?

டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.  நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் வில் யங்(Will Young) கொடுத்த ஸ்லிப் கேட்சை தவற விட்டு, பின்பு ஓவர் துரோவின் மூலம் ரன்களை அள்ளிக்கொடுத்த பங்களாதேஷ் அணி ஒரே பந்தில் 7 ரன்களை அடிக்க விட்டது.  இந்த நிகழ்வு முதல் நாள் உணவு இடைவேளை முடிந்து போடப்பட்ட முதல் ஓவரில் நடந்துள்ளது.  நியூசிலாந்து அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் டாம் லாதம் மற்றும் வில் யங் சிறப்பாக விளையாடி வந்தனர்.  இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள் குவித்து இருந்தபொழுது, வில் யங் பேட்டிங் செய்தார்.  அப்போது பந்து வில் யங்கின் பேட்டில் பட்டு எஜ் ஆனது.  அது நேராக ஃபர்ஸ்ட் ஸ்லிப் இடம் செல்ல அதை தவற விட்டனர், பின்பு அந்த பந்து பவுண்டரி நோக்கி சென்றது.  ஆனால் பவுண்டரி செல்லவிடாமல் லாபகரமாக தடுத்து கீப்பரிடம் வீசினர். 

 

இதற்குள் நியூஸிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் 3 ரன்களை ஓடிவிட்டனர்.  ரன் அவுட் செய்யும் முயற்சியில் பங்களாதேஷ் அணியின் விக்கெட் கீப்பர் பந்தை தூக்கி எறிய அது நேராக மற்றொருபுறம் பவுண்டரிக்கு சென்றது.  இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு ஒரே பந்தில் 7 ரன்கள் கிடைத்தது.   இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.  முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 349 ரன்களுக்கு 1 விக்கெட்டை  இழந்து உள்ளது.  டாம் லாதம் 186 ரன்களுடனும், டெவோன் கான்வே 99 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

ALSO READ | 2014க்கு பிறகு கோலி இல்லாமல் முதல் முறை தோற்ற இந்திய அணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News