2014க்கு பிறகு கோலி இல்லாமல் முதல் முறை தோற்ற இந்திய அணி!

கேப்டவுனில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரை 1-1 என தென் ஆப்பிரிக்கா சமன் செய்தது.  

Written by - RK Spark | Last Updated : Jan 8, 2022, 07:24 PM IST
  • கேப்டவுனில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
  • 2014-ம் ஆண்டுக்குப் பிறகு,கோஹ்லி இடம்பெறாத டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததில்லை.
2014க்கு பிறகு கோலி இல்லாமல் முதல் முறை தோற்ற இந்திய அணி! title=

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் கே.எல்.ராகுலின் கேப்டன்ஷிப் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். கேப்டவுனில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், தொடரை 1-1 என தென் ஆப்பிரிக்கா சமன் செய்தது.  கேப்டன் விராட் கோலி (Virat kohli), போட்டி நடைபெறும் அன்று ஏற்பட்ட முதுகுவலி காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். துணை கேப்டனாக இருந்த ராகுல், அந்த போட்டியில் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார்.  

2014-ம் ஆண்டுக்குப் பிறகு, லெவன் அணியில் கோஹ்லி இடம்பெறாத டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததில்லை. கோஹ்லி காயம் அல்லது ஓய்வில் இருந்த ஆறு டெஸ்டில் இந்தியா விளையாடிய போது,அதில் நான்கில் வெற்றி பெற்றது.   இந்தியா அணியின் தோல்வி குறித்து கூறிய கவாஸ்கர், "தென்னாப்பிரிக்கா கேப்டனின் விக்கெட்டை எடுக்கும் விதத்தில் ராகுல் பீல்டிங்கை வைத்து இருக்க வேண்டும்.  விராட் கோலி விளையாடாத டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது இதுவே முதல் முறை. கோஹ்லி விளையாடாத பெரும்பாலான போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றனர் அல்லது டிரா செய்துள்ளனர்.  ஆனால் கேஎல் ராகுலிடம் தலைமையில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.  கடினமான பீல்டிங்கை செட் செய்யாததால் ஈசியாக சிங்கிள் மற்றும் இரண்டு ரன்களை ஓடி எடுத்தனர்" என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

கோலியின் உடற்தகுதி குறித்து கூறிய டிராவிட், "ஜனவரி 11-ம் தேதி கேப்டவுனில் நடைபெறும் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு கோலி உடல்தகுதியுடன் இருப்பார்.  விராட் கோலி முழு தகுதியுடன் களம் இறங்க வேண்டும்.  தற்போது அவருக்கு ஓய்வு எடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.   இதன் பின்பு நெட்ஸ் பயிற்சியில் ஈடுபட்டு தன் பழைய பார்மை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.  அடுத்த டெஸ்டுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் கோலியின் காயம் சரியாகிவிடும்" என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.

ALSO READ | ஐபிஎல் 2022: அனைத்து போட்டிகளையும் மும்பையில் மட்டும் நடத்த திட்டம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News