Cricket: ஆல்ரவுண்டர் Shakib Al Hasan செய்த புதிய சாதனை என்ன தெரியுமா?

வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் Shakib Al Hasan கிரிக்கெட்டில் புதிய சாதனை செய்திருக்கிறார். ஓராண்டு தடைக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் களம் இறங்கியிருக்கிறார் ஷாகிப்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2021, 06:20 PM IST
  • ஆல்ரவுண்டர் Shakib Al Hasan கிரிக்கெட்டில் புதிய சாதனை
  • ஓராண்டு தடைக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் ஷாகிப் விளையாடுகிறார்
  • வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன்
Cricket: ஆல்ரவுண்டர் Shakib Al Hasan செய்த புதிய சாதனை என்ன தெரியுமா? title=

ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் ஒரு புதிய சாதனையை உருவாக்கியுள்ளார்.  மேற்கிந்திய தீவுகளுக்கு (West Indies) எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் (ODI) போது நட்சத்திர ஆட்டக்காரரான ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தினார்.

33 வயதான Shakib Al Hasan இப்போது ஒரே நாட்டிற்கு எதிராக 6,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை எடுத்த ஒரே கிரிக்கெட் வீரராக மாறியுள்ளார்.

ஒரு வருட தடைக்கு பின்னர் ஷாகிப் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தத் தொடரில் தான் சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஆஸ்திரேலியாவில் Virat, Ajinkya உடனான அனுபவங்களை பகிரும் நடராஜன்

கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும், அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது பங்களாதேஷ் (Bangladesh) வீரர் ஷாகிப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வங்காளதேசத்தின் தமீம் இக்பால் (Tamim Iqbal) 6,714 ரன்கள், முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) 6,104 என இருவர் முன்னிலையில் இருக்க, மொத்தம் 170 போட்டிகளில் 6,045 சர்வதேச ரன்கள் (சராசரி 36.85) குவித்துள்ள
ஷாகிப் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

பங்களாதேஷ் அணியில் சர்வதேச போட்டிகளில் (international cricket) அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பட்டியலிலும் ஷாகிப் கணிசமான வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

Also Read | தேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா?

சூதாட்ட தரகர் அணுகியதை தெரிவிக்காததால்  வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் சர்வதேச போட்டியில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது.   ஷகிப்பின் ஓராண்டு தடை 2020ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது.

ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய மூன்று குற்றச்சாட்டுகளை ஷாகிப் ஒப்புக் கொண்டதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அவரை இரண்டு வகையான கிரிக்கெட்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் (ஒரு வருடம் இடைநீக்கம் செய்து) தடை செய்தது. தடைக் காலம் முடிந்து திரும்பி வந்த பிறகு, ஷாகிப் 113 ரன்கள் எடுத்துள்ளார், ஆறு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Also Read | இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் தேர்வு விதிமுறைகளை கடுமையாக்கும் BCCI

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News