இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் ஆஞ்சல் தாக்கூர் - மோடி!

சர்வதேச பனிச்சறுக்கு ரேஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை ஆஞ்சல் தாக்கூர்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Last Updated : Jan 10, 2018, 01:00 PM IST
இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் ஆஞ்சல் தாக்கூர் - மோடி!

சர்வதேச பனிச்சறுக்கு ரேஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை ஆஞ்சல் தாக்கூர்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சண்டிகர், மணாலியைச் சேர்ந்த ஆஞ்சல் தாக்கூர் என்ற 21 வயது வீராங்கனை, நேற்று சிக்கிம்மில் நடைப்பெற்ற சர்வதேச பனிச்சறுக்கு ரேஸ் போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம், சர்வதேச பனிச்சறுக்கு ரேஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பல மாத பயிற்சியின் பலனாக இந்த பதக்கத்தினை நான் பெற்றுள்ளேன் என அவர் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் இத்தகு குளிர்கால விளையாட்டுகளுக்கு எந்தஉள்கட்டமைப்பும் கிடையாது, இருப்பினும் இவர் இந்திய தரப்பில் சிக்கிம்-க்கு சென்று பதக்கம் வென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரது வெற்றிக்கு பாராட்டு தெரிவித்து பாரத பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வாழ்த்துசெய்தி பதிவிட்டுள்ளார்.

More Stories

Trending News