இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. புனேவில் நடைபெற்ற இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஹைதராபாத் பீல்டிங் தேர்வு செய்தது. கேன் வில்லியம்சன் தலைமையில் ஹைதராபாத் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்தினார்.
Let's Play!
Live - https://t.co/WOQ4HjEaOT #SRHvRR #TATAIPL pic.twitter.com/5oUrjMQHzO
— IndianPremierLeague (@IPL) March 29, 2022
மேலும் படிக்க | IPL2022: கடைசி நிமிட பரபரப்பு! தம்பியின் விக்கெட்டை வீழ்த்திய அண்ணன்!
ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டியது. ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் கூட்டணி பவர் பிளேயில் சிறப்பாக விளையாடி 50 ரன்களுக்கு மேல் எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் அதிரடி காட்டினார். 27 பந்துகளில் 5 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உட்பட 55 ரன்கள் அடித்தார். அவருடன் இணைந்து படிக்கல்லும் அதிரடியாக விளையாடி 41 ரன்களை அடித்தார். ஹெட்மையர் 13 பந்துகளில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரி உட்பட 32 ரன்களை விளாசினார். இதனால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் அடித்தது.
Innings Break!
An impressive batting display, led by captain @IamSanjuSamson #RR t
Scoreco/GaOK5ulUqE#TATAIPL | #SRHvRR pic.twitter.com/ov4T9tw58o
— IndianPremierLeague (@IPL) March 29, 2022
கடின இலக்கை எதிர்த்து ஆடிய சன்ரைசர்ஸ் அணி ஆரம்பத்திலிருந்து அதிர்ச்சி காத்திருந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். வில்லியம்சன் 2, அபிஷேக் சர்மா 9. திரிபாதி 0, பூரன் 0 என 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. மார்க்ராம் மட்டும் கடைசி வரை அவுட் ஆகாமல் 57 ரன்களை எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 40 ரன்கள் விளாசியும் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
The @rajasthanroyals start their #TATAIPL campaign on a winning note.
Three wickets for @yuzi_chahal and two wickets apiece for Trent Boult and Prasidh Krishna as #RR win by 61 runs.
Scorecard - https://t.co/WOQ4HjEIEr #SRHvRR #TATAIPL pic.twitter.com/5baoMqXxip
— IndianPremierLeague (@IPL) March 29, 2022
மேலும் படிக்க | IPL2022: நேற்றைய போட்டியில் ஆர்.சி.பி செய்த தவறு இதுதான்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR