என்னை ஓநாய்களிடம் தூக்கி எறியுங்கள், மீண்டு வருகிறேன் வைரலாகும் ரோஹித்தின் ட்வீட்

கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மாவின் மூன்றாண்டு பழைய டிவிட்டர் பதிவு வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 20, 2022, 11:53 AM IST
  • என்னை ஓநாய்களிடம் தூக்கி எறியுங்கள், மீண்டு வருகிறேன் - ரோஹித் ஷர்மா
  • கிரிக்கெட்டின் 3 வடிவங்களின் கேப்டன் ரோஹித் ஷர்மா
  • ரோஹித்தின் மூன்றாண்டு பழைய டிவிட்டர் பதிவு வைரல்
  • என்னை ஓநாய்களிடம் தூக்கி எறியுங்கள், மீண்டு வருகிறேன் - ரோஹித் ஷர்மா
என்னை ஓநாய்களிடம் தூக்கி எறியுங்கள், மீண்டு வருகிறேன் வைரலாகும் ரோஹித்தின் ட்வீட் title=

இந்திய அணியின் நிரந்தர டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மாவின் 3 ஆண்டு பழைய ட்வீட் வைரலாகியுள்ளது. காலச்சக்கரம் மீண்டும் சுழன்று வரும் என்பதற்கு அண்மை உதாரணம் இந்திய கேப்டனின் பழைய டிவிட்டர் செய்தி.

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான அணிகளை பிசிசிஐ அறிவித்ததையடுத்து, தொடக்க வீரர் ரோஹித் சர்மா சனிக்கிழமை (பிப்ரவரி 19) இந்தியாவின் நிரந்தர டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவில் தொடரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து விராட் கோலி ராஜினாமா செய்த சில வாரங்களுக்குப் பிறகு, ரோஹித் டெஸ்ட் கேப்டன் பதவியை பெற்றுள்ளார்.

தற்போது, விராட்டுக்கு பிறகு கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் இந்தியாவின் கேப்டனாக ரோஹித் ஷர்மா பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரோகித்சர்மா புதிய டெஸ்ட் கேப்டன் - ரஹானே, புஜாரா நீக்கம்

இதில் சுவாரசிய நினைவூட்டலாக, ரோஹித் ஷர்மாவின் மூன்று ஆண்டு பழைய ட்விட்டர் பதிவு வைரலானது. தொடக்க ஆட்டக்காரரான ரோஹித், செப்டம்பர் 1, 2018 அன்று செய்த டிவிட்டர் பதிவு அது.

அந்த ட்வீட்டில், 'என்னை ஓநாய்களிடம் தூக்கி எறியுங்கள், நான் மீண்டும் வருகிறேன்' என்று எழுதப்பட்டிருந்தது.

முன்னதாக சனிக்கிழமையன்று, அகில இந்திய மூத்த-தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மா, நாட்டின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் என்று ரோஹித் ஷர்மாவை பாராட்டினார்.  

"ரோஹித் ஷர்மாவைப் பொறுத்த வரையில், அவர் நம் நாட்டின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர், அவர் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் விளையாடுகிறார். ரோஹித்தை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதுதான் முக்கியம், கிரிக்கெட் வீரர்கள் தங்கள் உடலை எப்படி நிர்வகிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. தேர்வுக் குழுவாக நாங்கள் மேலும் கேப்டன்களை வளர்க்க விரும்புகிறோம்." என்று சேத்தன் சர்மா ஒரு மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

ரோஹித் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டது பற்றி மேலும் பேசிய சேத்தன் கூறினார்: "ரோஹித் எங்களின் தெளிவான தேர்வு, அவரை கேப்டனாக நியமித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவருக்கு கீழ் உள்ள வீரர்களை வருங்கால கேப்டன்களை உருவாக்குவோம், எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புவோம்"

"ரோஹித் நீண்ட காலம் கேப்டனாக இருப்பது நல்லது. ஆனால் அதை யாராலும் கணிக்க முடியாது, ரோஹித்துக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கு பொருத்தமாக இருக்கும் வரை, அவர் டெஸ்ட் கேப்டனாக இருப்பார். அவர் ஓய்வெடுக்க விரும்பினால், அது அவருடைய விருப்பம்” என்று சேத்தன் மேலும் கூறினார்.

இலங்கைத் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (C), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், விராட் கோலி, ஸ்ரேயாஸ், ஹனுமா விஹாரி, ஷுப்மான் கில், ரிஷப் பண்ட், KS பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின் (உடற்தகுதி), ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப், குல்தீப் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், சௌரப் குமார்.

மேலும் படிக்க | முதல் போட்டியிலேயே 341 ரன்கள்! சாதனை படைத்த சகிபுல் கனி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News