இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு செல்ல இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அடிலெய்டில் நடந்த பயிற்சியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் அடைந்தார். ரோஹித் சர்மாவின் வலது கையில் அடிபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெட் செஷனில் பயிற்சியின் போது, பந்து அவரது வலது முன்கையைத் தாக்கியது, உடனடியாக வலியில் காணப்பட்டார், பின்பு பயிற்சியை விட்டு வெளியேறினார்.
மேலும் படிக்க | தோனி எனக்கு அனுப்பிய மெசேஜ் இது தான் - விராட் கோலி!
பிறகு ரோஹித் வலது கையில் ஒரு பெரிய ஐஸ் பேக் கட்டப்பட்டது, அதன் பிறகு கணிசமான வலியுடனும் காணப்பட்டார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை 2022ல் ரோஹித்தால் பெரிய ரன்கள் அடிக்க முடியவில்லை மற்றும் அவரது ஃபார்முடன் போராடி வருகிறார். நெதர்லாந்துக்கு எதிராக அவர் அடித்த 53 ரன்களை சேர்த்து மொத்தமாக இந்த தொடரில் ஐந்து போட்டிகளில் 89 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 246 ரன்களுடன் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்ததில் முதல் இடத்தில் உள்ளார், சூர்யகுமார் யாதவ் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 225 ரன்கள் எடுத்துள்ளார்.
Indian captain Rohit Sharma hit on his right hand during a practice session in Adelaide ahead of the semi-final match against England. pic.twitter.com/HA4xGJDC51
— ANI (@ANI) November 8, 2022
நவம்பர் 10, வியாழன் அன்று இங்கிலாந்து அணியுடன் இந்தியா விளையாடுகிறது. இங்கிலாந்து அணியிலும் காயம் பிரச்னை உள்ளது. இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மலான், இலங்கைக்கு எதிரான இங்கிலாந்தின் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். அவரும் அரையிறுதியில் விளையாடாமல் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் நாளை நவம்பர் 9 ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நவம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும்.
மேலும் படிக்க | டிவில்லியர்ஸை ஓரங்கட்டிய இந்தியாவின் 360
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ