புதியதொரு வரலாற்றை எழுதிய விராட் கோலி-ரோகித் சர்மா ஜோடி...

ஞாயிறு அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்ற ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றதோடு, ஒரு சில சாதனைகளையும் படைத்துள்ளார்!

Updated: Jan 20, 2020, 08:21 AM IST
புதியதொரு வரலாற்றை எழுதிய விராட் கோலி-ரோகித் சர்மா ஜோடி...

ஞாயிறு அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்ற ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றதோடு, ஒரு சில சாதனைகளையும் படைத்துள்ளார்!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 4 ரன்கள் குவித்த நிலையில் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோரை பின்னுக்கு தள்ளி 9000 ஒருநாள் ஓட்டங்கள் பெற்றொர் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார்.

217 இன்னிங்ஸ்களில் 9115 ரன்கள் குவித்துள்ள ரோகித் சர்மா, 228 இன்னிங்ஸ்களில் 9000 ரன்கள் குவித்த கங்குலி, டெண்டுல்கர் (235 இன்னிங்ஸ்), பிரையன் லாரா (239 இன்னிங்ஸ்) ஆகியோரை அவர் இப்பட்டியலில் பின் தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக மிக வேகமாக 9000 ஒருநாள் ஓட்டங்களுக்கான சாதனை படைத்தோர் பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலி (194 இன்னிங்ஸ்களில்) முதலிடத்தில் உள்ளார். இவரைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் 205 இன்னிங்சில் இந்த சாதனையினை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019-ல் ரோகித் சர்மா ஒரு அற்புதமான வெளிப்பாட்டினை காண்பித்துள்ளார். கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 7 சதங்களை அடித்ததற்காக (உலகக் கோப்பையில் மட்டும் 5) அவருக்கு ICC ஒருநாள் வீரர் விருது அறிவித்தது. மேலும் ரோகித் 2019-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் சுட்டிக்காட்டப்பட்டார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் தனது 29-வது சதத்தினை பதிவு செய்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த 4-வது வீரராக அடையாளம் காணப்பட்டார். இந்த பட்டியலில் தற்போது 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முன்னிலை வகிக்கிறார், விராட் கோலி 43 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 30 சதங்களுடன் ரிக்கி பான்டிங் 3-ஆம் இடத்தில் உள்ளார்.

வீரர் போட்டி இன்னிங்ஸ் ரன்கள் அதிக ரன் 100 50
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) 463 452 18426 200* 49 96
விராட் கோலி (இந்தியா) 245 236 11792 183 43 57
ரிக்கி பான்டிங் (ஆஸ்திரேலியா) 375 365 13704 164 30 82
ரோகித் சர்மா (இந்தியா) 224 217 9115 264 29 43
சனத் ஜெயசூரியா (இலங்கை) 445 433 13430 189 28 68
ஆம்லா (தென்னாப்பிரிக்கா) 181 178 8113 159 27 39

இதேப்போன்று விராட் மற்றும் ரோகித் சர்மா கூட்டணியில் நேற்று 137 ரன்கள் குவிக்கப்பட்டது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை எடுத்த 5-வது ஜோடி என பெயரிடப்பட்டனர்.