கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த புதிய சாதனையை படைத்தார் ரொனால்டோ. ஹாட் ட்ரிக் கோல்களை அடித்து புதிய உலக சாதனை ஏற்படுத்தி சாதனை
ரொனால்டோ டோட்டன்ஹாமுக்கு எதிராக அசத்தலான ஹாட்ரிக் கோல்கள் மூலம் போட்டி கால்பந்தில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
CRISTIANO RONALDO WHAT A GOAL! pic.twitter.com/Q0cNlDFCUH
— TC (@totalcristiano) March 12, 2022
இந்த புதிய சாதனை மூலம், இதுவரை இருந்த அதிக கோல்கள் சாதனையை முறியடித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
மூன்று பரபரப்பான கோல்கள் மூலம், ரொனால்டோ விளையாட்டு வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார், கால்பந்து ஜாம்பவான் ஜோசப் பிகானை விஞ்சிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
மேலும் படிக்க | சம்பள பட்டியலில் மெஸ்சியை முந்தினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
மான்செஸ்டர் யுனைடெட் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சனிக்கிழமையன்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பருக்கு எதிரான பிரீமியர் லீக் ஆட்டத்தில் அசத்தலான ஹாட்ரிக் கோல் மூலம் போட்டி கால்பந்து வரலாற்றில் தனது பெயரைப் பதித்தார்.
ரொனால்டோ, தனது முதல் இரண்டு கோல்களுடன், கால்பந்து ஜாம்பவான் ஜோசப் பிகானை விஞ்சி, விளையாட்டு வரலாற்றில் முன்னணி கோல் அடித்தவர் ஆனார்.
37 வயதான ரொனால்டோவின் சாதனையை முறியடிப்பது எளிதல்ல.
இதுவரை ரொனால்டோ 807 கோல்களை அடித்துவிட்டார். மான்செஸ்டர் அணியின் வெற்றியை தீர்மானிக்கும் கோலாக ரொனால்டோவின் கோல்கள் அமைந்தன.
அவர் யுனைடெட்டிற்குத் திரும்பியதிலிருந்து தனது முதல் ஹாட்ரிக்கை நிறைவு செய்ததோடு மட்டுமல்லாமல், டோட்டன்ஹாமுக்கு எதிராக சொந்த அணியை 3-2 என்ற கணக்கில் வெற்றிபெறச் செய்தார்.
ரொனால்டோ 1956 ஆம் ஆண்டு, முதல் சாதனை படைத்த பிகானை முறியடித்தார். புகழ்பெற்ற 25 ஆண்டுகால வாழ்க்கையில் விளையாடிய 530 ஆட்டங்களில், பிகான் 805 கோல்களை அடித்துள்ளார். அதில் 395 கோல்கள் ஸ்லாவியா ப்ராக் அணிக்காக 217 போட்டிகளில் அடிக்கப்பட்டன.
பிகான் தனது வாழ்க்கையில் 1500 கோல்களுக்கு மேல் அடித்ததாக கூறப்பட்டாலும், அதில் 805 கோல்களை மட்டுமே FIFA அங்கீகரித்துள்ளது.
பார்சிலியன் ஜாம்பவான் ரொமாரியோ 1985 மற்றும் 2007 க்கு இடையில் 994 ஆட்டங்களில் 772 கோல்களுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார், ரொனால்டோவின் பரம எதிரியான மெஸ்ஸி 2003 இல் அறிமுகமானதில் இருந்து 961 போட்டிகளில் 759 கோல்களுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
மேலும் படிக்க | ரொனால்டோவின் கையசைவால் கவிழ்ந்த நிறுவனம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR