சிஎஸ்கே தோல்விக்கு தோனியை கைகாட்டும் சேவாக்

சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்விக்கு தோனி மீது பல்வேறு காரணங்களை அடுக்கியுள்ளார் சேவாக்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 5, 2022, 05:19 PM IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்விக்கு காரணம் என்ன?
  • காரணங்களை அடுக்கும் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்
  • ஜடேஜாவிடம் கேப்டன்ஷிப்பை ஒப்படைத்தது தவறு
சிஎஸ்கே தோல்விக்கு தோனியை கைகாட்டும் சேவாக்  title=

கடந்த சீசன் வரை ஐபிஎல் தொடரில் கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு படு மோசமாக விளையாடி வருகிறது. வெற்றிக்கு அருகில் செல்லும் அந்த அணிக்கு வெற்றி கிட்டுவதில்லை. நடப்பு சாம்பியனின் ஆட்டத்தைக் கண்டு ரசிகர்களே வெதும்பி போய் உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான சேவாக்கும் பல்வேறு காரணங்களை அடுக்கியுள்ளார். தொடரின் தொடக்கத்திலேயே சிஎஸ்கே செய்த தவறுகளை பின்பாயிண்டாக சேவாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் படிக்க | மதம்மாற கட்டாயப்படுத்தியதாக ஷாகித் அப்ரிடி மீது சரமாரி குற்றச்சாட்டு

இது குறித்து அவர் பேசும்போது, " ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜடேஜாவிடம் தோனி கேப்டன்ஷிப்பை ஒப்படைத்திருக்கக்கூடாது. தொடக்கத்தில் இருந்தே தோனி கேப்டனாக இருந்திருந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமான தோல்விகளை சந்தித்திருக்காது அல்லது பிளே ஆப் சுற்று வாய்ப்பிலாவது நீடித்திருக்கும். ஐபிஎல் தொடர் தொடக்கப் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், குறிப்பாக பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடவில்லை. 

ருதுராஜ் கெய்க்வாட் இப்போது விளையாடுவதுபோல் அப்போது ஆடவில்லை. இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடியிருந்தால் சில போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும்.  சென்னை அணியைப் பொறுத்தவரை, ஆரம்பமே சொதப்பலாக தொடங்கிவிட்டது. அது அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பையும் பறித்திருக்கிறது. தோனி இப்போது மீண்டும் கேப்டன்சியை எடுத்தற்கு, சீசன் தொடகத்திலேயே கேப்டனாக இருந்திருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வியை தழுவி 9வது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க | சிஎஸ்கே தோல்விக்கு தோனி காரணமா? இவரை எடுக்காதது ஏன்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News